என் அனுபவங்கள் -1

குறிப்பு : சிலருடைய மோசமான அனுபவங்கள் எல்லாம் உதாரணங்கள் அல்ல

நம்ம ராதாகிருஷ்ணன் அண்ணாச்சி ஒரு பதிவு போட்டிருந்தார் பக்கத்து சீட்ல சனி பாகம்1, பாகம்2 ன்னு அதுல அவருடைய பங்கு சந்தை அனுபவங்களை மிக சுவையாக எழுதியிருந்தார்.

நான் இந்த வலைப்பூவில் எங்காவது கேட்டது படித்தது என எதாவது எழுதியிருந்தாலும் என் அனுபவங்களை இதுவரை எழுதியதில்லை. புத்தகத்தில் படித்ததெல்லாம், நான் சொல்லவில்லை என்றால் கூட வேறு வழியில் கிடைக்க கூடும்.

ஆனால் ஒரே விசயத்தில் ஒவ்வொருவரின் அனுபவமும் வேறுபடும். இந்த பதிவுகள் யாருக்கும் பயன்படுகிறதோ இல்லையோ செய்த தவறுகளை திரும்ப செய்யாமல் இருக்க குறைந்த பட்சம் எனக்கே உதவியாக இருக்கும்.

நான் சின்ன பையனாக இருக்கும்போதே என் அம்மா மாதம் 15 ரூபாய் குடுத்து போஸ்ட் ஆபீஸில் RD கட்டி வர செய்தார்கள். அப்பல்லாம் வீட்டில உண்டியல் இருக்கும் அப்பா ஆபீஸ்ல இருந்து வந்ததும் பாக்கெட்ல சில்லரை எதாவது இருந்தா அப்பப்ப அதுல போட்டு வைப்பார்.

இதையெல்லாம் பாத்து வளந்த எனக்கு பணத்தை சேமிக்க வேண்டும் என்ற என்னம் சின்ன வயதில் இருந்தே இருந்தது. இப்பல்லாம் எத்தனை வீட்டுல உண்டியல் இருக்குன்னு தெரியலை. பணம் எங்கிருந்து வருதுன்னா ATM மிசின்ல இருந்து வருதுன்னு சொல்றவங்கதான் ஜாஸ்தி.

நான் படிச்சி முடிக்கும் வரை பணத்தின் கஷ்டம் தெரியாமல்தான் இருந்தேன். அப்பா எதாவது உருட்டி புரட்டி குடுத்துடுவார். ஆனால் வீண் விரயம் செய்ததில்லை.

பணத்தின் அருமையை அழகாக உணர்த்தியவன் என் நண்பன் பேர் சங்கர். நாங்க ரெண்டுபேரும் 1ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்புவரை பள்ளி தோழர்கள். அவங்க அப்பாவும் என் அப்பாவும் ப்ரெண்ட்ஸ் ஒன்றாக ரயில்வேயில் பணியாற்றியவர்கள்.

காலேஜ் முடிச்சி சென்னையில் ஒரு கம்பெனியில் சாதாரண வேலைக்கு 1000 ரூ சம்பளத்திற்கு சேர்ந்து கம்பெனி விட்டு கம்பெனி தாவி ரூ 5000 சம்பளம் அளவிற்கு வளர்வதற்குள் 2 - 3 வருடம் ஓடிவிட்டது.

சம்பாதிக்கிறதுல எதாவது மீதி இருந்தாதானே சேமிக்கிறது பத்தியெல்லாம் யோசிக்கனும். சம்பளம் 5000 ஆன பிறகு கொஞ்சம் பணம் Savings Accountல் இருக்க தொடங்கியது.

அப்போதுதான் என் நண்பன் சங்கர் என் ஊரில் ஒரு DTP சென்டர் ஆரம்பித்தான். அப்போது கொஞ்சம் பணம் அவனுக்கு ஹார்ட் டிஸ்க் வாங்க மற்றும் லேசர் பிரிண்டர் மாற்றவும் தேவைப்பட்டது அப்போது என்னிடம் இருந்த 15,000 ரூபாய்களை கொடுத்து உதவினேன். (இது நடந்தது 1998 - 99 இருக்கலாம்)

(தொடரும்)

Posted in Labels: |

ஆஃப் மார்க்கெட் ட்ரான்ஸ்பர்

இந்தியாவில் NSDL (National Securities Depositary Limited), CDSL (Central Depositary Services Limited)என இரண்டு டெபாசிடரிகள் உள்ளன. ஒரே டெபாசிடரிக்கு ஆஃப் மார்க்கெட்-ல் பங்குகளை மாற்றும் போது TIFD (Transfer Instruction for Delivery) ஸ்லிப் கொடுக்க வேண்டும்.

CDSL ல் இருந்து NSDL க்கோ அல்லது NSDL ல் இருந்து CDSL க்கோ பங்குகளை ஆஃப் மார்க்கெட்டில் மாற்ற IDT (Inter Depositary Transfer ) ஸ்லிப் கொடுக்க வேண்டும்.

Off market transfer charges 0.04% of total value of the shares.

முந்தைய பதிவில் ஆஃப் மார்க்கெட் ட்ரான்ஸ்பர் எவ்வாறு செய்வது என கணேஷ் கேட்டிருந்தார். கீழே உள்ள இணைக்கப்பட்டுள்ள படங்களை பார்க்கவும்.

இது நான் ஐசிஐசிஐ டீமேட் (NSDL)ல் இருந்து ரிலையன்ஸ் மணி (CDSL)க்கு மாற்ற கொடுத்த இன்ஸ்ட்ரக்ஷன்

படம் முழுமையாக தெரிய படத்தின் மேல் க்ளிக் செய்யவும்.

டார்கெட் க்ளையண்ட் ஐடி ரிலையன்ஸ்ல் லாகின் ஆனவுடன் ட்ரேட் பக்கத்தில் டிபி ஐடி என வரும். க்ளையன்ட் மாஸ்டர் ரிப்போர்ட் என ஒரு ரிப்போர்ட் கொடுத்திருப்பார்கள் அதிலும் இருக்கும். ISIN நம்பர் உங்கள் ஹோல்டிங் டிபியிலேயே இருக்கும் அல்லது http://www.nseindia.com/ ல் இருந்து பெறவும்.







இரண்டும் ஒரே டெபாசிடரியாக இருக்கும் பட்சத்தில் கொடுக்க வேண்டிய ஸ்லிப் TIFD கீழே






Posted in Labels: |

ரிலையன்ஸ் மணி இரண்டு நாள் அனுபவங்கள்

ரிலையன்ஸ் மணி
இரண்டு நாள் அனுபவங்கள்

நேற்றும் இன்றுமாக இரண்டாவது நாளாக ட்ரேட் செய்கிறேன் இதை வைத்து ஒரு முடிவுக்கு வர முடியாது இருந்தாலும் ஒரு அறிமுகத்திற்காக.

ரிலையன்ஸ் மணிக்கும் ஐசிஐசிஐ டீமேட்டுக்கும் மெனுக்கள் எந்த குழப்பமும் இல்லை. இதில் BSE யிலும் மார்ஜின் ட்ரேட் செய்ய முடிகிறது ஐசிஐசிஐ-ல் மார்ஜின் ட்ரேடிங் NSE ல் மட்டுமே. அனைவரும் எச்சரித்திருந்தபடியே போர்ட்டல் மிக மெதுவாகவே வேலை செய்கிறது.

ரிலையன்ஸ் மணியில் Trade Now, Insta Trade என இரண்டு வழிகளில் ட்ரேட் செய்யமுடியும் என தெரிகிறது. நான் நேற்றும் இன்றும் ட்ரேட் செய்தது Trade now எனும் சாதாரண முறை.

Insta Trade நான் டீமேட் அப்ளை செய்யும் போது அப்ளை செய்யவில்லை, எனவே நான் இந்த ஆப்ஷனில் ட்ரேட் செய்ய இன்னும் ஒரு வாரம் ஆகும் என தெரிவித்தனர். இந்த Insta Trade நம் கம்ப்யூட்டரில் டெர்மினலை கொண்டுவரும் என தெரிகிறது (real time streaming). இது எப்படி விரைவாக இருக்கிறதா என்பதை வந்தவுடன் தெரிவிக்கிறேன்.

இந்த இரண்டு தினங்களில் நான் கண்டறிந்தது ‘Trade Now’ல் Order Book, Trade Book, Ledger Balance அனைத்தும் ஜாவா pop-up விண்டோவில் வருகிறது. ஒருமுறை வந்த pop-up விண்டோவை மூடாமல் வைத்துக்கொண்டால் ஒரு லிங்கிலிருந்து அடுத்தது மாறும் போது விரைவாக கிடைக்கிறது. உதாரணத்துக்கு ஆர்டர் புக்கிலிருந்து ட்ரேட் புக் அல்லது டீமாட் பாலன்ஸ்.

ஐசிஐசிஐ டீமெட்டில் இருந்து எல்லா ஹோல்டிங்குகளையும் off market ட்ரான்ஸ்பர் மூலம் ரிலையன்ஸ் மணி டீமேட்டுக்கு மாற்றியுள்ளேன். ஐசிஐசிஐ ப்ரோகரேஜ் ரெகமண்டேஷன்ஸ் நன்றாக இருப்பதாக படுவதால் அதை மூடாமல் வைத்திருக்கலாம் எனவும் நினைத்திருக்கிறேன்.

எது எப்படியோ நமக்கு லாபம் வந்தால் சரிதான். பார்ப்போம்.

Posted in Labels: |

பங்குகளின் தரம் ஆய்தல் -Fundamendal Analysis

பங்குகளின் தரம் ஆய்தல் (Fundamendal Analysis) Glossary

இதுவரை பார்த்துவந்த புதியவர்களுக்காக பகுதிகளில் இருந்து பங்குகளின் தர அடிப்படையில் தேர்வு செய்வது எப்படி? கவனிக்க வேண்டியன என்னென்ன? மற்றும் இதன் தொடர்பான பயனுள்ள வலை முகவரிகள்.

நிறுவன பெயர் , முகவரி, என்ன பிசினஸ் இவை எதற்கு என்றால் Bull Market இருக்கும் போது நிறைய லெட்டர் பேட் கம்பெனிகள் பங்கும் பறக்கும் ஆனால் Bear Market வரும் போது கீழே விழுந்தால் மேலே போகவே போகாது.

ஐ.டி, தொழில் நுட்பத்துறை எனில் யார் யார் க்ளையண்ட் அதன் வருங்கால பிசினஸ் எப்படி இருக்கும் என்பவை.

பங்கின் முக மதிப்பு (face value), மார்க்கெட் கேப்பிடலைசேஷன்.

வருடத்தின் அதிக பட்ச விலை மற்றும் குறைந்த பட்ச விலை. Investment Prespective ல் சந்தையை அனுகுபவர்கள் வருடத்தின் அதிக பட்ச விலை இருக்கும்போது வாங்கக்கூடாது. சந்தை விழும் சமயத்தில்தான் வாங்கவேண்டும் அது எவ்வளவு நல்ல நிறுவனமாக இருந்தாலும்.

கடந்த வருடங்களில் நிறுவனம் பங்கு முதலீட்டாளர்களுக்கு கொடுத்து வந்த டிவிடண்ட், போனஸ்.

அதே துறையில் உள்ள போட்டி நிறுவனத்துடன் லாப விகிதங்கள் ஒப்பீடு.

PE Ratio, EPS இதில் முக்கியமானது ஒத்த நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது PE குறைவாக இருக்க வேண்டும் EPS அதிகமாக இருக்க வேண்டும்.

இவையெல்லாம் பத்திரிகைகளிலும் வலைத்தளங்களிலும் எளிதாக கிடைக்கும் தகவல்கள்.

பயனுள்ள வலைகள்
www.nseindia.com
www.bseindia.com
www.moneycontrol.com
http://www.rediff.com/money/index.html
http://content.icicidirect.com/research/research.asp
http://www.investopedia.com/university/fundamentalanalysis/

Posted in Labels: |

புதியவர்களுக்காக - 7

PE Ratio & EPS (Price Earning Ratio & Earnings Per Share)

உதாரணத்துக்கு ABC என்ற ஒரு நிறுவனத்தின் பங்கை எடுத்துக்கொள்வோம்.

அதன் மார்க்கெட் விலை ரூ.100
வெளியிட்டுள்ள
மொத்த பங்குகள் 100000
என கொண்டால்

மார்க்கெட்
கேபிடலைசேஷன் = 100000 X 100 = 100 லட்சம்

அந்நிறுவனம் வருடத்திற்கு 10 லட்சம் லாபம் ஈட்டுகிறது என கொள்வோம்

EPS = 10 லட்சம் (லாபம்)/ 1 லட்சம் (மொத்த பங்குகள்)
= 10ரூ ஷேருக்கு

PE Ratio = பங்கின் விலை / EPS

= 100/10

= 10

ABC நிறுவனத்தின் PE Ratio 10


SENSEX / NIFTY ன் PE Ratio

ஒரு இன்டெக்ஸ்ஸின் PE கண்டுபிடிக்க அந்த இன்டெக்ஸிலுள்ள ஒவ்வொரு நிறுவன PE கண்டுபிடித்து அந்த நிறுவனத்தின் இன்டெக்ஸின் வெயிட்டேஜ் அளவைப் பொறுத்து எல்லாவற்றையும் சேர்க்கும் மதிப்பு ஆகும்.

ஒரு பங்கின் தரத்தை நிர்ணயிக்க EPS என்பது மிக அடிப்படியான அவசியமான அளவுகோலாகும்.

புதியவர்களுக்காக - 6

புதியவர்களுக்காக - 6

பங்கிலிருந்து வருமானம்

சமசீர் பங்கு (Equity)

ஈக்விடி ஒரு நிறுவனத்தில் நமது வரையறுக்கப்பட்ட உரிமையினை குறிக்கிறது. எவ்வளவு அதிகமான ஈக்விடி ஷேர் உள்ளதோ அந்த அளவு அதிக உரிமை. ஒரு நிறுவனத்தின் பங்கு வைத்திருப்பது என்பது ஷேர் வைத்திருக்கும் பல்லாயிர கணக்கானவர்களில் நீங்களும் ஒருவர். வைத்திருக்கும் பங்கின் அளவை பொருத்து நிறுவன எல்லா சொத்துக்களிலும் நீங்களும் ஒரு உரிமையாளர் (this means technically, you own a portion of every piece of furniture, trademark, contract, etc of the company).

உரிமையாளர் என்ற முறையில் நிறுவன வருமானம், ‘வோட்’டிங் உரிமை (Voting rights) போன்றவை உங்களுக்கு உண்டு. இன்னொரு முக்கியமானது நிறுவனம் சரியாக இயங்காமல் கடன் போன்றவை ஏற்பட்டால் ஈக்விடி ஷேர் ஹோல்டர்கள் அதற்கு பொறுப்பாளர்கள் அல்ல. அதிக பட்சமாக அந்த பங்கு விலை குறைந்து நாம் போட்ட முதலீடு நஷ்டமடையும்.

பங்கிலிருந்து வருமானம்

1. முதலீடு பெருகுதல் (Capital Appreciation)

பொதுவாக இந்த பங்குகள் NSE / BSE ல் லிஸ்ட் செய்யப்பட்டு வர்த்தகம் நடைபெறும் அப்போது பங்குகளின் விலை நிறுவன செயல்பாடுகள், லாப/நஷ்டம், புதிய ஒப்பந்தங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் ஏறி இறங்கும் வாங்கிய விலையை விட அதிகமாக இருக்கும் போது விற்பது இது முதலீடு பெருகுதல் (Capital Appreciation) எனப்படுகிறது.

2. போனஸ் ஷேர்கள் (Bonus Shares)

நிறுவனம் நன்றாக செயல்பட்டு லாபம் ஈட்டும் போது போனஸ் ஷேர்கள் அறிவிக்கப்படலாம். எல்லா நிறுவனங்களும் இது போல அறிவிப்பதில்லை அதனால் பங்குகளை தேர்ந்தெடுக்கும்போது அதன் கடந்த வருடங்களின் செயல்பாடுகளை கவனிக்க வேண்டியது மிக முக்கியம்.

3.ரைட்ஸ் (Rights Issue)

ரைட்ஸ் ஷேர்கள் இது நிறுவனங்கள் பின்பற்றும் இன்னொரு முறை. அதாவது நிறுவனம் புதியதாக வெளியிடும் பங்குகளை ஏற்கனவே அந்நிறுவன பங்குகளை வைத்திருப்பவர்களுக்கு குறைந்த விலைக்கு கொடுக்கும். இந்த ஷேர்களையும் நிறுவனத்திடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி வெளி மார்க்கெட்டில் மார்க்கெட் விலைக்கு விற்க்கலாம்.

4. டிவிடெண்ட் (Divident)

நிறுவனம் ஈட்டிய லாபத்தை அதன் பங்கு வைத்திருப்பவர்களுக்கு டிவிடெண்ட்டாக கொடுக்கலாம். இங்கும் கவனிக்க வேண்டியது கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை எல்லா நிறுவனங்களும் கொடுப்பதும் இல்லை. பங்குகளை வாங்கும்போதே இதை எல்லாம் கவனித்து வாங்க வேண்டும்.

பங்கு தேர்ந்தெடுக்கும் முறைகள் (Strategies)

1. பங்கின் விலை அடிப்படையில் வாங்குவது

அடிப்படையில் நல்ல ஒரு நிறுவனத்தின் (fundamentally strong company) பங்கு விலை குறைவாக இருக்கும் போது வாங்குவது. உதாரணத்திற்க்கு இப்போது IT பங்குகள்.

2. டிவிடெண்ட் தரும் பங்குகள்

தொடர்ந்து டிவிடெண்ட் கொடுக்கும் பங்குகளை வாங்குவது. நிறுவனம் நன்கு செயல்பட்டு லாபம் ஈட்டினால்தான் டிவிடெண்ட் தொடர்ந்து கொடுக்க முடியும் எனவே கடந்த வருடங்களில் டிவிடெண்ட் தொடர்ந்து கொடுத்து வந்த நிறுவன பங்குகளை கவனித்து விலை குறையும் போது வாங்கலாம்.

3.டைவர்சிபிகேசன் (Diversification)

மொத்த முதலீட்டையும் ஒரே நிறுவன பங்குகளை வாங்கக்கூடாது (Diversification). அதற்க்காக Diversification செய்கிறன் என 20 – 30 நிறுவன பங்குகளையும் வாங்க கூடாது (over diversification) அதை follow செய்வது கடினம்.

பங்கு வர்த்தகத்தில் அபாயங்கள் (Risks)

முதலாவது வட்டி விகிதங்கள் அதிகரித்தல், Inflation, ஆட்சி மாற்றங்கள், போர் அபாயங்கள் போன்றவை.

இரண்டாவது நிறுவனத்தின் துறை சார்ந்த காரணிகள் (Industry Risk), ஸ்ட்ரைக், உற்பத்தியை பெருக்கும் புதிய தொழில் நுட்பங்களை நிறுவனம் அமல்படுத்தாமல் இருப்பது இதனால் அதே துறையில் உள்ள வேறு நிறுவனங்களின் உற்பத்தி அதிகரித்து நாம் முதலீடு செய்துள்ள நிறுவன லாபம் குறைவது போன்றவை. முதலீடு செய்துள்ள நிறுவன செயல்பாடுகளை கவனிக்காமல் இருப்பதும் ஒரு risk அதனால் அந்நிறுவன செயல்பாடுகள் பற்றி தொடர்ந்து கவனித்து வரவேண்டும்.

Happy Investing.