NIFTY டெக்னிகல் அனலிசிஸ்
Posted On Sunday, March 15, 2009 at at 3:53 AM by மங்களூர் சிவாஎந்த புத்துல எந்த பாம்பு இருக்கோ!?
Posted On Sunday, January 25, 2009 at at 3:42 AM by மங்களூர் சிவாநம்பிக்கைகளை சீர்குலைத்த புதுவருட ஆரம்பம் 2009.
உயர்வு வந்தால் தாழ்வும் வரும்
தாழ்வு வந்தால் உயர்வு வரும்
சத்யம்
ஆனால் இப்படி தரைமட்டத்திற்கு எதுவுமே இல்லாத அளவிற்கு போகும் என யாரும் கனவுகூட கண்டிருக்க மாட்டார்கள். சந்தைகளை கட்டுப்படுத்தும் உயர் அதிகாரங்களை கொண்ட செபி கோர்ட் வாசலில் அனுமதிகேட்டு கையேந்தி நிற்கிறது அனுமதி இல்லையாம் வேதனை :(
இந்தியாவில் பங்கு சந்தையில் ட்ரேடாகும் பல நிறுவனங்களில் வெளிப்படையான தன்மை இல்லை. வேறு வழியில்லாமல் ராமலிங்க ராஜூ உண்மையை சொல்லியிருக்கிறார். இன்னும் பல ராமலிங்க ராஜூக்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள். அவர்களும் உண்மை சொல்லும் நேரம் வரலாம்.
செபியின் பெயராலேயே போலியாக பிரமிட் சாய்மிராவிற்கு கடிதம் எழுதி அந்த பங்கில் விளையாடி இருக்கிறார்கள் அதற்காக காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இன்னும் எப்படி எல்லாம் மோசடி செய்யப்போகிறார்களோ :(
விசாரணை கமிஷன் என வருடங்களை இழுத்தடிக்காமல் சட்ட திட்டங்களை கடுமையானதாக்கி இவர்களுடைய சொத்துக்களை முடக்கி கடும் தண்டனை அளித்தால்தான் சிறு முதலீட்டாளர்களுக்கு இனி சந்தை மீது சிறிதளவாவது நம்பிக்கை வரும் ஆனால் அதெல்லாம் நடக்கப்போவதில்லை அது வேறு விசயம்.
ஐ.டி
"வரவு எட்டணா செலவு பத்தணா கடைசியில் துந்தனா" இந்த பாடலின் அர்த்தம் இப்போது பலருக்கும் புரிந்திருக்கும் அதுவரையில் சந்தோஷம். அவள் விகடனில் இந்த வாரம் வந்திருக்கும் கட்டுரை "பகட்டிலிருந்து பட்டினிக்கு" முடிந்தால் ஒருமுறை வாசியுங்கள்.
வராக் கடன்களால் (bad debts) லாபம் மிகவும் குறைந்து வெறும் 3 சதவிகித வளர்ச்சி அடைந்திருக்கிறதாம் ஐசிஐசிஐ வங்கி. பொறுப்பில்லாமல் கடன்களை வாரி வழங்கினால் வேற என்ன ஆகும். இப்படி செய்ததால்தான் அமெரிக்கா திவால் ஆகி இருக்கிறது. கே.வி காமத் ஐயா கொஞ்சம் பாத்து பண்ணுங்க சாமி :(
ரியல் எஸ்ட்டேட் விலை ஏறாமல் இருந்தாலும் இன்னும் விலை குறையவில்லை இன்னும் சில மாதங்கள் ஆகலாம் :))
இன்னும் எந்த புத்துல எந்த பாம்பு இருக்கோ!? :(
சென்செக்ஸ் என்ன ஆகும்??
Posted On Sunday, October 12, 2008 at at 2:59 AM by மங்களூர் சிவாசென்செக்ஸ் இப்போது down ward நடந்துகொண்டிருப்பது 1980ல் தொடங்கிய cyle -ன் நான்காவது பகுதி. ஐந்தாவது up-ward ல் சென்செக்ஸ் 25,000க்கும் அதிகமான புள்ளிகளுக்கு போகுமாம்.
சென்செக்ஸ் இன்னும் கீழே சென்றால் 9700 வரை செல்லுமாம் அது சரி இன்னும் எத்தனை நாள் இப்படியே இருக்கும்?
எலியட் வேவ் தியரிப்படி correction ஆனது அதற்கு முந்தைய up move ன் 0.33 ல் இருந்து 1.618 மடங்கு கால அளவுக்குள் இருக்குமாம் அதாவது 16 முதல் 77 மாதங்கள்.
இதற்கு முந்தைய correction 1994 ல் இருந்து 2003 வரை 9 வருடங்கள்.
9700க்கு கீழே சென்செக்ஸ் குறைகிறது எனும்பட்சத்தில் விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கும்.
FII தொடர்ந்து விற்று வருவதால்தான் இந்த அளவு வீழ்ச்சி அடைந்துள்ளது என அனைவருக்கும் தெரியும் இன்னும் 8 பில்லியன் அளவு அவர்களுடைய முதலீடு வரும் நாட்களில் வெளியேறலாம்
மேலும் விவரமாக ஆங்கிலத்தில் படிக்க இங்கே
இண்வெஸ்டர் மைண்ட்
Posted On Thursday, August 21, 2008 at at 9:44 AM by மங்களூர் சிவாபணத்தை இழப்பது ஏன்?
Posted On Saturday, May 31, 2008 at at 2:40 AM by மங்களூர் சிவாபங்குச்சந்தையில் பெரும்பாலோனோர் பணத்தை இழப்பது ஏன்?. இந்த பதிவில் புதிதாக ஒன்றும் இல்லை ஏற்கனவே பெரும்பாலானவை முந்தைய பதிவுகளில் சொல்லப்பட்டவைதான். பல்வேறு காரணங்களை இதற்கு சொல்லலாம் என்றாலும் முக்கியமான மூன்று
1. பேராசை
2. நிதானமின்மை
3. அதிகப்படியான ரிஸ்க் எடுத்தல்
பங்குச்சந்தையில் பல்வேறு முறைகளில் பங்குவர்த்தகம் செய்ய முடிந்தாலும் உதாரணத்திற்கு Delivery based trade, Margin trading, Margin Plus trading, F&O , Commodities , Buy today sell tomorrow (BTST) எவை உங்களுக்கு நன்கு தெரியுமோ அவை மட்டுமே செய்ய வேண்டும்.
சில தொலைக்காட்சி சானல்களில் டை கட்டிக்கொண்டு நாங்கதான் சந்தை ஜோசியர்கள் (அனலிஸ்ட்டாம்) என்று ஆருடம் சொல்பவர்களை தவிருங்கள். அடிப்படையில் நல்ல பங்குகளை சந்தை சரிவை பயன்படுத்தி வாங்குங்கள். நீங்கள் வைத்திருக்கும் பங்கை பற்றிய தகவல்களை நிறைய படியுங்கள். அதிர்ஷ்டத்தை நம்பி சந்தைக்கு வராதீர்கள்.
சந்தையில் பணம் சம்பாதிப்பது மிக கடினம் ஆனால் பணத்தை விடுவது மிக எளிது. சந்தையில் வர்த்தகம் செய்யும் எவருக்கும் இந்த உண்மை கண்டிப்பாக தெரியும். உங்களுக்கென ஒரு வழிவகை வகுத்துக்கொண்டு (make a set of rules) அதை கண்டிப்பாக பின்பற்றினால் வெற்றி நிச்சயம்.
"share market is a place where money gets transfers from un-patient people to patient people" - Warren Buffet
ரிலையன்ஸ் மணி - பாஸ்ட் ட்ரேட்
Posted On Thursday, April 24, 2008 at at 10:53 PM by மங்களூர் சிவாரிலையன்ஸ் மணி - பாஸ்ட் ட்ரேட்
(click the images to enlarge)
2. ஸ்க்ரிப்ட் ஆட் / டெலிட் / வாங்க / விற்க செய்வது (ரைட் கிளிக்)
3. மற்ற மெனு
928+
Posted On Tuesday, March 25, 2008 at at 6:13 AM by மங்களூர் சிவாநீண்ட நான்கு நாட்கள் விடுப்பிற்கு பின் இன்றைய சந்தையில் FII-கள் 1240 கோடிக்கு பங்குகளை வாங்கியிருக்கிறார்கள். முப்பை சந்தை 928 புள்ளிகளும் தேசிய சந்தை 267 புள்ளிகளும் உயர்ந்து சிறு முதலீட்டாளர்களுக்கு ஒரு நம்பிக்கை ஒளியை தந்திருக்கிறது.
சென்செக்ஸ் 928.09 உயர்வு 6.07% 16217.49,
நிப்டி 267.65 உயர்வு 5.81% 4877.50.
BSE Midcap Index ended at 6,174.49 up 6.4%.
BSE Smallcap Index ended at 7,284.64 up 5%.
BSE Bankex closed at 8,371.34 up 8%. HDFC, HDFC Bank, IOB, ICICI Bank, Centurion bank, Axis closed in green.
BSE Capital Goods Index closed at 13,867.60 up 5%. L&T, ABB, BHEL, Suzlon, Reliance Infra, Siemens, Triveni Engineering closed higher.
BSE Auto Index closed at 4,582.05 up 4%. Apollo Tyres, Escorts, Ashok Leyland, Hind Motors closed higher.
BSE Metal Index closed at 13,607.64 up 6.4%. SAIL, JSW Steel, Jindal Steel, Jindal Stainless, Hind Zinc closed higher.
BSE FMCG Index closed up 2% at 2,226.78. HUL, Colgate, ITC, Nestle, Dabur ended higher
Oil and Gas Index closed at 10,308.80 up 6%. Cairn, Reliance, RPL, BPCL, HPCL, IOC, Reliance Natura, GAIL ended higher.
BSE IT Index was at 3,686.35 up 8%. HCL Tech, Infosys, Tech mahindra, TCS, Tech Mahindra closed higher.
இருங்கப்பா மூச்சு விட்டுக்கறேன்.

