Showing posts with label புதியவர்களுக்காக. Show all posts
Showing posts with label புதியவர்களுக்காக. Show all posts

புதியவர்களுக்காக - 7

PE Ratio & EPS (Price Earning Ratio & Earnings Per Share)

உதாரணத்துக்கு ABC என்ற ஒரு நிறுவனத்தின் பங்கை எடுத்துக்கொள்வோம்.

அதன் மார்க்கெட் விலை ரூ.100
வெளியிட்டுள்ள
மொத்த பங்குகள் 100000
என கொண்டால்

மார்க்கெட்
கேபிடலைசேஷன் = 100000 X 100 = 100 லட்சம்

அந்நிறுவனம் வருடத்திற்கு 10 லட்சம் லாபம் ஈட்டுகிறது என கொள்வோம்

EPS = 10 லட்சம் (லாபம்)/ 1 லட்சம் (மொத்த பங்குகள்)
= 10ரூ ஷேருக்கு

PE Ratio = பங்கின் விலை / EPS

= 100/10

= 10

ABC நிறுவனத்தின் PE Ratio 10


SENSEX / NIFTY ன் PE Ratio

ஒரு இன்டெக்ஸ்ஸின் PE கண்டுபிடிக்க அந்த இன்டெக்ஸிலுள்ள ஒவ்வொரு நிறுவன PE கண்டுபிடித்து அந்த நிறுவனத்தின் இன்டெக்ஸின் வெயிட்டேஜ் அளவைப் பொறுத்து எல்லாவற்றையும் சேர்க்கும் மதிப்பு ஆகும்.

ஒரு பங்கின் தரத்தை நிர்ணயிக்க EPS என்பது மிக அடிப்படியான அவசியமான அளவுகோலாகும்.

புதியவர்களுக்காக - 6

புதியவர்களுக்காக - 6

பங்கிலிருந்து வருமானம்

சமசீர் பங்கு (Equity)

ஈக்விடி ஒரு நிறுவனத்தில் நமது வரையறுக்கப்பட்ட உரிமையினை குறிக்கிறது. எவ்வளவு அதிகமான ஈக்விடி ஷேர் உள்ளதோ அந்த அளவு அதிக உரிமை. ஒரு நிறுவனத்தின் பங்கு வைத்திருப்பது என்பது ஷேர் வைத்திருக்கும் பல்லாயிர கணக்கானவர்களில் நீங்களும் ஒருவர். வைத்திருக்கும் பங்கின் அளவை பொருத்து நிறுவன எல்லா சொத்துக்களிலும் நீங்களும் ஒரு உரிமையாளர் (this means technically, you own a portion of every piece of furniture, trademark, contract, etc of the company).

உரிமையாளர் என்ற முறையில் நிறுவன வருமானம், ‘வோட்’டிங் உரிமை (Voting rights) போன்றவை உங்களுக்கு உண்டு. இன்னொரு முக்கியமானது நிறுவனம் சரியாக இயங்காமல் கடன் போன்றவை ஏற்பட்டால் ஈக்விடி ஷேர் ஹோல்டர்கள் அதற்கு பொறுப்பாளர்கள் அல்ல. அதிக பட்சமாக அந்த பங்கு விலை குறைந்து நாம் போட்ட முதலீடு நஷ்டமடையும்.

பங்கிலிருந்து வருமானம்

1. முதலீடு பெருகுதல் (Capital Appreciation)

பொதுவாக இந்த பங்குகள் NSE / BSE ல் லிஸ்ட் செய்யப்பட்டு வர்த்தகம் நடைபெறும் அப்போது பங்குகளின் விலை நிறுவன செயல்பாடுகள், லாப/நஷ்டம், புதிய ஒப்பந்தங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் ஏறி இறங்கும் வாங்கிய விலையை விட அதிகமாக இருக்கும் போது விற்பது இது முதலீடு பெருகுதல் (Capital Appreciation) எனப்படுகிறது.

2. போனஸ் ஷேர்கள் (Bonus Shares)

நிறுவனம் நன்றாக செயல்பட்டு லாபம் ஈட்டும் போது போனஸ் ஷேர்கள் அறிவிக்கப்படலாம். எல்லா நிறுவனங்களும் இது போல அறிவிப்பதில்லை அதனால் பங்குகளை தேர்ந்தெடுக்கும்போது அதன் கடந்த வருடங்களின் செயல்பாடுகளை கவனிக்க வேண்டியது மிக முக்கியம்.

3.ரைட்ஸ் (Rights Issue)

ரைட்ஸ் ஷேர்கள் இது நிறுவனங்கள் பின்பற்றும் இன்னொரு முறை. அதாவது நிறுவனம் புதியதாக வெளியிடும் பங்குகளை ஏற்கனவே அந்நிறுவன பங்குகளை வைத்திருப்பவர்களுக்கு குறைந்த விலைக்கு கொடுக்கும். இந்த ஷேர்களையும் நிறுவனத்திடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி வெளி மார்க்கெட்டில் மார்க்கெட் விலைக்கு விற்க்கலாம்.

4. டிவிடெண்ட் (Divident)

நிறுவனம் ஈட்டிய லாபத்தை அதன் பங்கு வைத்திருப்பவர்களுக்கு டிவிடெண்ட்டாக கொடுக்கலாம். இங்கும் கவனிக்க வேண்டியது கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை எல்லா நிறுவனங்களும் கொடுப்பதும் இல்லை. பங்குகளை வாங்கும்போதே இதை எல்லாம் கவனித்து வாங்க வேண்டும்.

பங்கு தேர்ந்தெடுக்கும் முறைகள் (Strategies)

1. பங்கின் விலை அடிப்படையில் வாங்குவது

அடிப்படையில் நல்ல ஒரு நிறுவனத்தின் (fundamentally strong company) பங்கு விலை குறைவாக இருக்கும் போது வாங்குவது. உதாரணத்திற்க்கு இப்போது IT பங்குகள்.

2. டிவிடெண்ட் தரும் பங்குகள்

தொடர்ந்து டிவிடெண்ட் கொடுக்கும் பங்குகளை வாங்குவது. நிறுவனம் நன்கு செயல்பட்டு லாபம் ஈட்டினால்தான் டிவிடெண்ட் தொடர்ந்து கொடுக்க முடியும் எனவே கடந்த வருடங்களில் டிவிடெண்ட் தொடர்ந்து கொடுத்து வந்த நிறுவன பங்குகளை கவனித்து விலை குறையும் போது வாங்கலாம்.

3.டைவர்சிபிகேசன் (Diversification)

மொத்த முதலீட்டையும் ஒரே நிறுவன பங்குகளை வாங்கக்கூடாது (Diversification). அதற்க்காக Diversification செய்கிறன் என 20 – 30 நிறுவன பங்குகளையும் வாங்க கூடாது (over diversification) அதை follow செய்வது கடினம்.

பங்கு வர்த்தகத்தில் அபாயங்கள் (Risks)

முதலாவது வட்டி விகிதங்கள் அதிகரித்தல், Inflation, ஆட்சி மாற்றங்கள், போர் அபாயங்கள் போன்றவை.

இரண்டாவது நிறுவனத்தின் துறை சார்ந்த காரணிகள் (Industry Risk), ஸ்ட்ரைக், உற்பத்தியை பெருக்கும் புதிய தொழில் நுட்பங்களை நிறுவனம் அமல்படுத்தாமல் இருப்பது இதனால் அதே துறையில் உள்ள வேறு நிறுவனங்களின் உற்பத்தி அதிகரித்து நாம் முதலீடு செய்துள்ள நிறுவன லாபம் குறைவது போன்றவை. முதலீடு செய்துள்ள நிறுவன செயல்பாடுகளை கவனிக்காமல் இருப்பதும் ஒரு risk அதனால் அந்நிறுவன செயல்பாடுகள் பற்றி தொடர்ந்து கவனித்து வரவேண்டும்.

Happy Investing.

புதியவர்களுக்காக-3

பங்கு வாங்கியாகி விட்டது. அதை எப்படி தொடர்ந்து கண்காணிப்பது எனவும் பார்த்தாகி விட்டது. இனி செய்ய வேண்டியது என்ன?ஜாக்கிரதையாய் இருப்பதுதான்.

யாரிடம் ஜக்கிரதையாய் இருக்க வேண்டும்? பங்கு சந்தையிடம்.

வாரன் பப்பட் பங்கு சந்தையை பற்றி மிஸ்டர் மார்க்கட் என்ற பெயரில் சுவரசியமாக ஒரு கதை சொல்லுவார். அந்த கதையை விட்டுவிட்டு அதில் உள்ள கருத்தை மட்டும் சொல்லுகிறேன். "Market is always correct.market is perfect " என்ற ஒரு மாயை பங்கு சந்தையில் நிலவுகிறது. பப்பட் அது தவறு என்கிறார். பங்கு சந்தை பெர்பெக்டாக இருந்திருந்தால் நான் இன்னும் ஏழையாக தான் இருந்திருப்பேன் என்கிறார். பப்பட்டின் வார்த்தைகளில் Market is not awlays correct.It is at times correct.There is a difference between both these views. The difference is like that between day and night.

பங்கு சந்தையின் விலை உண்மை விலையை விட அதிகமாக இருக்கும்போது பேசாமல் இருக்க சொல்கிறார். பங்கு சந்தை விலை உண்மை விலையை விட குறைவாக இருக்கும்போது பங்குகளை வாங்க சொல்கிறார். பங்கு விலை குறைந்தால் தான் அவர் மகிழ்வார்.கடையில் பொருள் விலை குறைந்தால் வாடிக்கையாளருக்கு மகிழ்ச்சி தானே? அது போல் தான் இதுவும் என்கிறார் பப்பட்.

நிறைய கம்பனிகளின் பங்குகளை வாங்குவதையும் அவர் ஆதரிக்கவில்லை. 20 கம்பனிகளின் பங்குகளுக்கு மேல் அவர் வாங்கமாட்டார். நாம் இன்னும் குறைவாக தான் வாங்க வேண்டும்.ஒரே கம்பனியில் பணம் போடுவதும் தவறு. 10 நல்ல கம்பனிகளை கண்டறிந்த பிறகு மேலும் பணம் போடவேண்டுமென்றால் அந்த 10லேயே போடலாம் அல்லவா? 11வது கம்பனி எதற்கு என கேட்கிறார் பப்பட். "which is the right time to sell?"' என்ற குழப்பம் பங்கு சந்தை துறைகளில் உண்டு. பப்பட் இதற்கு தெளிவான பதில் வைத்திருக்கிறார். NEVER என்பது தான் அவரின் பதில்.

நம்மால் அப்படி செய்ய முடியாமல் போனாலும் குறைந்தது 10 - 20 வருடங்களுக்கு வாங்கிய பங்கை விற்கக் கூடாது. பப்பட் இதற்கு வீட்டை உதாரனம் சொல்கிறார்.10 லட்சம் தந்து வீடு வாங்குகிறோம்.வாங்கிய மறுநாள் சந்தை மதிப்பு 11 லட்சம் ஆகிறது. லட்ச ரூபாய் லாபம் கிடைக்கிறது என்பதற்காக வீட்டை விற்போமா? சந்தை விலையை பற்றி கவலைப்படவே மாட்டோம் அல்லவா? அதுபோல் தான் பங்குகளும் என்கிறார் பப்பட்

புதியவர்களுக்காக - 2

ஒரு நிறுவனத்தின் பங்கை வாங்குவதற்கு முன் அந்த நிறுவனம் பற்றி அதன் செயல்பாடுகள், லாபம் ஈட்ட கூடிய வழிகள், அதன் கடந்த ஆண்டுகளின் லாப நட்ட கணக்கு, P/E , EPS போன்றவற்றை ஆரய்ந்து பின்னர் வாங்க வேண்டும். இவை எல்லாம் http://www.nseindia.com/, http://www.bseindia.com/ மற்றும் பல இணையதளங்களில் கிடைக்கும்.

விலை குறைவாக இருக்கிறது என ஊர் பேர் தெரியாத கம்பெனி குப்பை பங்குகளை வாங்காதீர்கள்.

அவசர தேவைகளுக்காக என இருக்கும் பணத்தை ஷேர்களில் முதலீடு செய்யாதீர்கள். குறைந்த பட்சம் ஒரு ஆண்டிலிருந்து மூன்றாண்டுகள் காத்திருக்க முடியும் எனும் பட்சத்தில் முதலீடு செய்வது நல்லது.

கண்ணை மூடிக்கொண்டு நண்பர்கள் சொன்னார்கள் (TIPS), வேறு யாரும் சொன்னார்கள் என்று எதையும் வாங்காதீர்கள்.

எவ்வளவுதான் நல்ல நிறுவனமாக இருந்தாலும் எல்லா பணத்தையும் ஒரே நிறுவன பங்குகளில் முதலீடு செய்யாதீர்கள். வேறு வேறு துறைகளில் உள்ள நல்ல நிறுவனங்களின் பங்குகளில் பிரித்து முதலீடு செய்வதால் ஒரு நிறுவன பங்கு நன்றாக செயல்படாமல் நட்டம் ஏற்பட்டாலும் வேறு நிறுவன பங்குகள் நட்டத்திலிருந்து காப்பாற்ற உதவும். உதாரணத்திற்கு சாப்ட்வேர் என்றால் டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ் டெலிகாம் என்றால் ரிலயன்ஸ் கம்யூனிகேசன், பார்தி ஏர்டெல், இஞ்சினியரிங் துறை என்றால் எல்&டி, பி.எச்.இ.எல்.

உங்களுக்கு பங்கு சந்தை பற்றி நல்ல அனுபவம் வரும் வரை தின வர்த்தகம் (Day Trading) செய்யாதீர்கள்.

வாங்கிய பங்கு குறைந்த காலத்திலேயே 10 - 15 சதவிகிதம் லாபம் அடைந்திருந்தால் பங்குகளில் ஒரு பகுதியை விற்று பணத்தை தயாராக வைத்திருப்பது நல்லது. விலை குறந்தால் திரும்பவும் வாங்கலாம். விலை குறையவில்லை என்றாலும் பாதகமில்லை.

தொடர்ந்து பங்கு சந்தையில் என்ன நடக்கிறது என்பதை பற்றி தொலைகாட்சி, பத்திரிகை, இணையம் மூலமாக படித்து கவனித்து வாருங்கள்.

வாங்க பணம் பண்ணலாம் , ஸ்டார்ட் மியூஜிக்.

என்னுடைய இன்னொரு வலைப்பூ பார்க்க இங்க க்ளிக் பண்ணுங்க.

புதியவர்களுக்காக

எல்லாரும் ஷேர் மார்க்கட்ல பணம் எக்கச்சக்கமா சம்பாதிக்கறாங்க நாமும் சம்பாதிப்போம் அப்படின்னு குருட்டான்போக்கில இறங்கினால் நஷ்டம்தான் மிஞ்சும். ஒன்றை உடனடியாக பத்தாக்குவதற்கு ஷேர்மார்க்கட் ஒன்றும் சூதாட்டகளம் அல்ல.

பங்கின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கத்திற்கு முக்கிய காரணம் Law of Demand and Supply அதாவது வாங்குபவர்கள் அதிகம் இருந்து விற்பவர்கள் குறைவாக இருந்தால் பங்கின் விலை ஏறும் அதே போல வாங்குபவர்கள் குறைவாக இருந்து விற்பவர்கள் அதிகம் இருந்தால் விலை சரியும்.

நிறுவனத்தின் நிர்வாகம் நன்றாக இருந்து லாபம் ஈட்டுவது, புதிய கம்பெனிகளை வாங்குவது (acquisitions) போன்ற சமயங்களில் நிறைய பேர் அந்த நிறுவன பங்கை வாங்க முயலும் போது (Demand) பங்கின் விலை ஏறும்.

நிறுவனத்தின் நிர்வாகம் சரியாக இல்லாமல் இருந்து அல்லது வேறு காரணங்களால் ஈட்டும் லாபம் குறைவது போன்ற சமயங்களில் பங்கை விற்க நிறைய பேர் முயலும் போது (Supply) விலை குறையும்.

பங்கின் விலை ஏற்ற இறக்கத்திற்கு இது மட்டுமே காரணம் அல்ல. வரும் பதிவுகளில் பார்ப்போம்.

என்னுடைய இன்னொரு வலைப்பூ பார்க்க இங்க க்ளிக் பண்ணுங்க.