சென்செக்ஸ் என்ன ஆகும்??
Posted On Sunday, October 12, 2008 at at 2:59 AM by மங்களூர் சிவாசென்செக்ஸ் இப்போது down ward நடந்துகொண்டிருப்பது 1980ல் தொடங்கிய cyle -ன் நான்காவது பகுதி. ஐந்தாவது up-ward ல் சென்செக்ஸ் 25,000க்கும் அதிகமான புள்ளிகளுக்கு போகுமாம்.
சென்செக்ஸ் இன்னும் கீழே சென்றால் 9700 வரை செல்லுமாம் அது சரி இன்னும் எத்தனை நாள் இப்படியே இருக்கும்?
எலியட் வேவ் தியரிப்படி correction ஆனது அதற்கு முந்தைய up move ன் 0.33 ல் இருந்து 1.618 மடங்கு கால அளவுக்குள் இருக்குமாம் அதாவது 16 முதல் 77 மாதங்கள்.
இதற்கு முந்தைய correction 1994 ல் இருந்து 2003 வரை 9 வருடங்கள்.
9700க்கு கீழே சென்செக்ஸ் குறைகிறது எனும்பட்சத்தில் விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கும்.
FII தொடர்ந்து விற்று வருவதால்தான் இந்த அளவு வீழ்ச்சி அடைந்துள்ளது என அனைவருக்கும் தெரியும் இன்னும் 8 பில்லியன் அளவு அவர்களுடைய முதலீடு வரும் நாட்களில் வெளியேறலாம்
மேலும் விவரமாக ஆங்கிலத்தில் படிக்க இங்கே
இண்வெஸ்டர் மைண்ட்
Posted On Thursday, August 21, 2008 at at 9:44 AM by மங்களூர் சிவாபணத்தை இழப்பது ஏன்?
Posted On Saturday, May 31, 2008 at at 2:40 AM by மங்களூர் சிவா
பங்குச்சந்தையில் பெரும்பாலோனோர் பணத்தை இழப்பது ஏன்?. இந்த பதிவில் புதிதாக ஒன்றும் இல்லை ஏற்கனவே பெரும்பாலானவை முந்தைய பதிவுகளில் சொல்லப்பட்டவைதான். பல்வேறு காரணங்களை இதற்கு சொல்லலாம் என்றாலும் முக்கியமான மூன்று
1. பேராசை
2. நிதானமின்மை
3. அதிகப்படியான ரிஸ்க் எடுத்தல்
பங்குச்சந்தையில் பல்வேறு முறைகளில் பங்குவர்த்தகம் செய்ய முடிந்தாலும் உதாரணத்திற்கு Delivery based trade, Margin trading, Margin Plus trading, F&O , Commodities , Buy today sell tomorrow (BTST) எவை உங்களுக்கு நன்கு தெரியுமோ அவை மட்டுமே செய்ய வேண்டும்.
சில தொலைக்காட்சி சானல்களில் டை கட்டிக்கொண்டு நாங்கதான் சந்தை ஜோசியர்கள் (அனலிஸ்ட்டாம்) என்று ஆருடம் சொல்பவர்களை தவிருங்கள். அடிப்படையில் நல்ல பங்குகளை சந்தை சரிவை பயன்படுத்தி வாங்குங்கள். நீங்கள் வைத்திருக்கும் பங்கை பற்றிய தகவல்களை நிறைய படியுங்கள். அதிர்ஷ்டத்தை நம்பி சந்தைக்கு வராதீர்கள்.
சந்தையில் பணம் சம்பாதிப்பது மிக கடினம் ஆனால் பணத்தை விடுவது மிக எளிது. சந்தையில் வர்த்தகம் செய்யும் எவருக்கும் இந்த உண்மை கண்டிப்பாக தெரியும். உங்களுக்கென ஒரு வழிவகை வகுத்துக்கொண்டு (make a set of rules) அதை கண்டிப்பாக பின்பற்றினால் வெற்றி நிச்சயம்.
"share market is a place where money gets transfers from un-patient people to patient people" - Warren Buffet
ரிலையன்ஸ் மணி - பாஸ்ட் ட்ரேட்
Posted On Thursday, April 24, 2008 at at 10:53 PM by மங்களூர் சிவாரிலையன்ஸ் மணி - பாஸ்ட் ட்ரேட்
(click the images to enlarge)

2. ஸ்க்ரிப்ட் ஆட் / டெலிட் / வாங்க / விற்க செய்வது (ரைட் கிளிக்)

3. மற்ற மெனு

928+
Posted On Tuesday, March 25, 2008 at at 6:13 AM by மங்களூர் சிவாநீண்ட நான்கு நாட்கள் விடுப்பிற்கு பின் இன்றைய சந்தையில் FII-கள் 1240 கோடிக்கு பங்குகளை வாங்கியிருக்கிறார்கள். முப்பை சந்தை 928 புள்ளிகளும் தேசிய சந்தை 267 புள்ளிகளும் உயர்ந்து சிறு முதலீட்டாளர்களுக்கு ஒரு நம்பிக்கை ஒளியை தந்திருக்கிறது.
சென்செக்ஸ் 928.09 உயர்வு 6.07% 16217.49,
நிப்டி 267.65 உயர்வு 5.81% 4877.50.
BSE Midcap Index ended at 6,174.49 up 6.4%.
BSE Smallcap Index ended at 7,284.64 up 5%.
BSE Bankex closed at 8,371.34 up 8%. HDFC, HDFC Bank, IOB, ICICI Bank, Centurion bank, Axis closed in green.
BSE Capital Goods Index closed at 13,867.60 up 5%. L&T, ABB, BHEL, Suzlon, Reliance Infra, Siemens, Triveni Engineering closed higher.
BSE Auto Index closed at 4,582.05 up 4%. Apollo Tyres, Escorts, Ashok Leyland, Hind Motors closed higher.
BSE Metal Index closed at 13,607.64 up 6.4%. SAIL, JSW Steel, Jindal Steel, Jindal Stainless, Hind Zinc closed higher.
BSE FMCG Index closed up 2% at 2,226.78. HUL, Colgate, ITC, Nestle, Dabur ended higher
Oil and Gas Index closed at 10,308.80 up 6%. Cairn, Reliance, RPL, BPCL, HPCL, IOC, Reliance Natura, GAIL ended higher.
BSE IT Index was at 3,686.35 up 8%. HCL Tech, Infosys, Tech mahindra, TCS, Tech Mahindra closed higher.
இருங்கப்பா மூச்சு விட்டுக்கறேன்.
சந்தை நேர மாற்றம் (Sun outage)
Posted On Monday, March 3, 2008 at at 5:51 AM by மங்களூர் சிவாThe Exchange has decided to change the market timings for both cash and derivatives markets during the period, March 04, 2008 to March 18, 2008 due to Sun Outage. The revised timings will be -
Market Open | 09.55 a.m. |
Market will remain close | 11.45 a.m. to 12.25 p.m. |
Market re-open | 12.30 p.m. |
Market Close | 04.15 p.m. |
Market Post Close | 04.35 p.m. to 04.45 p.m. |
பட்ஜட் 2008 - 2009
Posted On Friday, February 29, 2008 at at 8:19 PM by மங்களூர் சிவா
சம்பளதாரர்களுக்கு பயன்மிக்க பட்ஜட்.
ஆண்களுக்கு வரி விலக்கிற்கான வருமான அளவு 1,10,000 ரூபாயிலிருந்து 1,50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பெண்களுக்கு வரி விலக்கிற்கான வருமான அளவு 1,45,000 ரூபாயிலிருந்து 1,80,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மூத்த குடிமகன்களுக்கு வரி விலக்கிற்கான வருமான அளவு 1,95,000 ரூபாயிலிருந்து 2,25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஷார்ட் டெர்ம் கேபிடல் கெயின் டாக்ஸ் அதிகரிப்பு
ஷார்ட் டெர்ம் கேபிடல் கெயின் டாக்ஸ் 10% ல் இருந்து 15% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீண்ட கால் முதலீடை ஊக்குவிக்கும் விதமாக அதிகரிக்கப் பட்டுள்ளதாக கூறப்பட்டாலும். இது பண புழக்கத்தை குறைத்து பங்குசந்தையில் பின்னடைவையே ஏற்படுத்தும்.
60000 கோடி கடன் தள்ளுபடி
யார் அப்பன் வீட்டு பணம்யா????
விரிவான மற்ற செய்திகள் பட்ஜெட்1, பட்ஜெட்2, பட்ஜெட்3
என்ன நடக்குது பங்குசந்தையில!?!?
Posted On Tuesday, February 5, 2008 at at 6:15 AM by மங்களூர் சிவாபங்கு சந்தை பாடம் சொன்னது - யாருக்கு?
Posted On Wednesday, January 23, 2008 at at 4:24 AM by மங்களூர் சிவாபங்கு சந்தையை முதலீடு செய்யும் இடமாகவே பார்க்கவேண்டும். நான் முதலிலிருந்தே இதைத்தான் சொல்லிவருகிறேன். இரண்டு நாட்களாக சந்தை விழுந்து வருகிறது இந்நிலையில் இன்று காலை தமிழ்மணத்தில் ஒரு பதிவு கண்ணுக்கு தென்பட்டது ‘நடுத்தர வர்க்க யுப்பிகளுக்கு ஆப்பு வைத்த பங்கு சந்தை - அசுரனின் பதிவு’ என ஆகா எதோ நமக்கு வேண்டிய மேட்டர்தான் போல என்ன இருக்குன்னு பாக்கலாம்னு போய் பாத்தேன் அந்த சுட்டில நீங்களும் பாருங்க. ஒவ்வொரு முறை சந்தை விழும்போதும் வரும் புலம்பல்தான் இது. இதற்கு நாம் பதில் சொல்வதை விட இன்று சந்தையே 800 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து பதில் சொல்லிவிட்டது.
இன்று தமிழ்மணத்தில் பார்த்த இன்னும் இரு பதிவுகளின் சுட்டி கீழே.
பங்குசந்தை விழும்போதெல்லாம் கும்மியடிக்கும் கம்யூனிஸ்ட்கள் – தமிழ்மணியின் பதிவு
பங்கு சந்தை இனி ரத்த ஆறு ஓடட்டும் – செல்வனின் பதிவு
இந்த சுட்டிகளெல்லாம் எதெற்கென்றால் எவ்வளவுக்கெவ்வளவு படிக்கிறோமோ அவ்வளவு நம்மை கூர் தீட்டிக்கொள்ளத்தான்.
நம்ம ஊர் பக்கம் ஒரு பழமொழி சொல்வாங்க
“தினைக்கும் பிச்சை போடுற wxyz இன்னைக்கு போடலை
என்னிக்குமே போடாத மஹாலட்சுமி நீ போட்ட” – அப்பிடின்னு அது போல சந்தை பணத்தை அள்ளிக்கொடுத்த போதெல்லாம் சத்தமில்லாமல் இருந்துவிட்டு சரியும் போது கூக்குரலிடுவது அபத்தமாக இல்லை?
2005 ஆகஸ்ட்டில் சென்செக்ஸ் 7000 புள்ளிகளை தாண்ட சிரமப்பட்டது அப்போது அதுதான் உச்சம் ஆனால் இன்றைய நிலையில் சென்செக்ஸின் உச்சம் 21000 அது சற்றே இறங்கி நேற்றைய முடிவு 16720 புள்ளிகள் இன்று காலையிலிருந்தே 1000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து முடிவில் 811 புள்ளிகள் உயர்வாக 17540 புள்ளிகளில் முடிவடைந்துள்ளது.
ஏறுவதும் இறங்குவதும்தான் சந்தையின் இயல்பு. இந்த சரிவெல்லாம் தற்காலிகம்தான். 2005ல் முதலீடு செய்தவர்களுக்கு இப்போதைய சரிவு எப்படி பாதிக்காதோ அது போல முதலீட்டாளர்களை அது என்றுமே பாதித்ததில்லை பாதிக்கவும் பாதிக்காது. இழந்தது லாபத்தில் ஒரு சிறிய அளவே.
10% சந்தை சரிவதும் சந்தை 1 மணி நேரம் நிறுத்தப்படுவதும் முதல் தடவையா இல்லை இது கடந்த மூன்று வருடங்களிலேயே இது மூன்றாவது தடவை. எல்லா சரிவின் போதும் LIC, UTI மட்டுமே பங்குகளை வாங்கி சந்தையை தூக்கி நிறுத்தினால் சந்தை சரிவிற்கு அவர்களை தவிர வேறு யாரும் காரணமாக இருக்க முடியாது.
தின வணிகத்தை சூதாட்டம் என்று சொன்னாலும் தின வணிகம் இல்லை என்றால் எல்லோரும் டீமேட் ஸ்டேட்மெண்டை வைத்துக்கொண்டு நாக்கு வழிக்க வேண்டியதுதான் தேவையான சமயத்தில் டீமேட்டில் இருப்பதை பணமாக்க முடியாது.
பாதிக்கப்பட்டவர்கள் என பார்த்தால் சூதாட்ட நோக்கத்தில் ஒரு மாதத்தில் இரண்டு மடங்காக்கிவிடலாம் அது இது என சந்தையை பற்றி தெரியாமல் மற்றவர்களின் ஆலோசனை பெயரில் சந்தையில் என் புருசனும் கச்சேரிக்கு போறான் என இறங்கியவர்களே.
ஈக்விடி என்பது உங்களுக்கு நீங்கள் பங்கு வைத்திருக்கும் நிறுவனத்தில் உள்ள உரிமையை குறிப்பது உங்களிடம் உள்ள பங்கின் அளவை பொறுத்து. முதலீட்டு நோக்கோடு மட்டும் சந்தையை அணுகுங்கள்.
பொறுமை காக்கும் நேரம் இது - தென்றல்.
ஹாட் டிப்ஸ்
Posted On Saturday, January 5, 2008 at at 3:56 AM by மங்களூர் சிவாஅனைவருக்கும் கொஞ்சம் தாமதமான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். என்னுடைய இன்னொரு வலைப்பூவில் நூறாவது பதிவு மற்றும் புத்தாண்டு பதிவு எல்லாம் போட்டு கொண்டாடிட்டு இங்க வர கொஞ்சம் லேட்டாயிடிச்சு.
இப்பெல்லாம் ஆபீஸ்லயும் சரி ஆபீஸ்க்கு வெளியிலயும் சரி நாலுபேர் சேர்ந்து பேச ஆரம்பிச்சாலே ஸ்டாக் மார்க்கெட் பத்திதான் இப்ப நடந்துகிட்டிருக்கிறது ‘செகுலர் புல்’லாம் எப்பாடா என்னாமா கண்டுபிடிக்கிறாய்ங்கய்யா!! பங்கு சந்தை குறியீட்டு எண் இன்னும் மூணு – நாலு வருசத்துக்கு இப்பிடியே ஏறுமுகமா இருக்குமாம் நடு நடுவே சின்ன சின்ன சரிவுகள் வந்தாலும் அதையெல்லாம் தாண்டி.
யாரப்பாத்தாலும் அதை வாங்கினியா இதை வாங்கினியா இந்த ஸ்டாக் அடுத்த வாரம் பார் பறக்க போகுது. ஒருத்தர் ஒரு பங்கை ரெக்கமண்ட் சொல்லி நாம வாங்காம தப்பி தவறி அது மேல போகுதுன்னு வைங்க உடனே அதான் நாங்க அப்பவே சொன்னம்ல. எனக்கு இந்த விளையாட்டிலெல்லாம் கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை.
எனக்கு ஒரு ‘நல்ல’ கம்பெனி பங்கு வாங்கனும்னு தோணினா அத கவனிச்சு விலை குறையும்போது ஒரு சிறு அளவு வாங்கி அதன்பிறகும் விலைகுறைந்தால் திரும்பவும் ஒரு சிறு அளவு வாங்கி சேர்த்து வைத்து மூன்று மாதமானாலும் சரி ஆறு மாதமானாலும் சரி கழுதை பிக்ஸட் டெபாசிட் போட்டா வெயிட் பண்றதில்லையா கெடந்துட்டு போகட்டுமே அப்படிங்கிற இது என்ன ஊசிப்போகிற பொருளா!? இந்த அடிப்படையில தான் நான் பங்கு வர்த்தகம் செஞ்சுகிட்டு வரேன்.
என் ப்ரெண்ட்ஸ் சில சமயம் கிண்டல் செய்வதும் உண்டு அதுக்கெல்லாம் நான் கொஞ்சம் கூட கவலைப்பட மாட்டேன் சில நாட்கள் முன் என் நண்பர் ஒருவரை சந்திச்சப்ப நலமெல்லாம் விசாரிச்சு டீ எல்லாம் சாப்பிட்டதுக்கப்புறம் எப்பிடி போயிட்டிருக்கு உன்னோட ஷேர் அப்படின்னு பேச்சு திருப்பிச்சு இல்லடா எல்லாம் விட்டுட்டேன் அந்த பக்கமே போகறதில்ல ஒரு நாலரை லட்சரூவா நஷ்டம் ‘எப் & ஓ’ ல அப்படின்னார். எனக்கு ‘எப் & ஓ’ பற்றி ஒரு எல்.கே.ஜி மாணவனுக்கு அறிவு எவ்வளவோ அவ்வளவுதான் அதை பற்றி இத்தனைக்கும் என்னுடைய ‘ப்ரோகரேஜ் ஹவுஸ்’ இலவசமா பாடம் எல்லாம் நடத்துனாங்க அதுக்கப்புறமும், அதனால் அந்த பக்கமே தலை வெச்சு படுக்காம இருந்தேன். இவன் எப்ப அந்த பக்கம் போனான் ஏன் இப்படி ஆச்சு ஒண்ணும் புரியலை ஆனா ரொம்ப வருத்தமா ஆயிடிச்சு.
அதுபோல இந்த கம்மோடிடிஸ் , டெரிவேடிஸ் டிரேடிங்கும் ஒண்ணும் பிடிபடமாட்டிங்கிது உளுந்து, சோயா, தங்கம், வெள்ளி, நிக்கல் எல்லாம் எதையுமே டெலிவரி எடுக்காமலே வாங்கி வாங்கி விக்கலாமாம் மார்ஜின்ல. நான் கிராமத்துல வளந்தவன்கிறதுனால உளுந்து செடிய பாத்திருக்கேன், இட்லி தோசைக்கு பயன்படுத்துவாங்க இதுதான் உளுந்து பத்தி அதிகபட்சம் எனக்கு தெரிஞ்சது.
டெரிவேடிஸ்ங்கிறது கரன்சி ட்ரேடிங்காம் தெனைக்கும் மாறுபடற கரன்சி விலை வித்தியாசத்தை பயன்படுத்தி லாபம் சம்பாதிக்கலாமாம். ஒருவேளை இதை மட்டுமே தொழிலா செய்ய ஆரம்பிக்கும்போது பாத்துக்கலாம்னு இந்த பக்கமும் இன்னும் போகலை.
நேத்து அதாவது 4-1-08 வெள்ளிக்கிழமை என் செல்போன் அரைமணிக்கொருதரம் கொய்ங், கொய்ங், கொய்ங்னு எஸ்.எம்.எஸ்ஸா வந்திட்டிருக்கு என்னன்னு பாத்தா www.towerteammumbai.com னு ஒரு சர்வீஸ்ல இருந்து ஏழு நாள் ஃப்ரீ டரையலாம் அன்பு நண்பர்கள் யாரோ அவங்களுக்கு ரெஜிஸ்டர் பண்றப்ப இலவசம்தானே எங்க அண்ணனுக்கும் அனுப்புன்னு என் நம்பரையும் போட்டு விட்டுட்டாங்க போல.
ஒரு காலத்துல பங்குசந்தைல பயந்து பயந்து கால் வெச்ச சமயம் நாம பாட்டுக்கு எதாவது ஒரு கம்பெணி ஷேரை வாங்கி அது ஏடாகூடமாயிடிச்சினா என்ன பண்றதுன்னு ஆறு மாசத்துக்கு இரண்டாயிரம் ரூவா பணம் கட்டி ‘பவர் யுவர் ட்ரேட்’ டாட் காம்’ல சேர்ந்து சோரம் போனவங்க நாம!! இப்பல்லாம் திகட்ட திகட்ட டிப்ஸ் இலவசமாவே கிடைக்குது மோதிலால் ஓஸ்வால், ஐசிஐசிஐ டைரக்ட், ஆர் மணி, பங்குவணிகம் , சுதாகர் வலைப்பூ இதெல்லாம் இல்லாம எந்த ப்ரெண்டை மீட் பண்ணாலும் டிப்ஸ்.
கூட்டி கழிச்சி பாத்தா சில நண்பர்கள் இந்த ‘எப் & ஓ’ அது இதுன்னு விழுந்து பெரண்டு செய்யற லாபத்தைவிட ஒண்ணுமே செய்யாம ப்ளாக் எழுதிகிட்டு கமெண்ட் போட்டுகிட்டு ஜாலியா என்ஞாய் பண்ணிகிட்டிருக்க நான் எந்த விதத்திலும் % கொறைஞ்சே போயிடலை இன்னும் சொல்ல போனா என் சைடு கொஞ்சம் ஸேஃப்.
எல்லாம் சரி பிப்ரவரில இருந்து MF, FI எல்லாம் ஷார்ட் செல்லிங் அனுமதிக்கலாம்னு செபி முடிவு பண்ணியிருக்காம். எப்பிடியும் வருச கடைசிக்குள்ள சென்செக்ஸ் இருபத்திஐயாயிரம் பாயிண்ட் தாண்டீடுமாம். இது நான் உங்களுக்கு சொல்ற ஹாட் டிப்ஸ் இல்ல ஆறிப்போன டிப்ஸ்தான் இது.