ரிலையன்ஸ் மணி இன்ஸ்ட்டா ட்ரேட் செட்டிங்ஸ்.

ரிலையன்ஸ் மணி இன்ஸ்ட்ரா ட்ரேட் செட்டிங்ஸ்.

You are kindly requested to perform the following steps to enable INSTA TRADE

1. Open www.reliancemoney.com

2. Click on Insta Trade

3. Login with User name, password and Security Key

4. Jump to --- Select Trading

5. Click Login

6. Click Help

7. Click Misc Links

8. Click JVM

9. Save on local disk

10. Click on jvm.zip

11. Click msjavax.zip to install

12. Reboot PC

13. Sun JVM must be disabled :
Go to Internet Browser--> Tools --> Internet Options -->Advanced -->Java(Sun).
(Change this setting only if aforesaid settings are found)

14. Enable Microsoft VM :
Go to Internet Browser --> Tools --> Internet Options --> Advanced --> Java Console enabled.

Go to Internet Browser --> Tools --> Internet Options --> Advanced --> Java Logging enabled.

Go to Internet Browser --> Tools --> Internet Options --> Advanced --> JIT complier for virtual machine enabled.

15. Save all changes and re-login.

Incase if you are still unable to login to INSTA TRADE then please send us an email to customer.support@reliancemoney.co.in.

Posted in Labels: |

அனுபவம் 5

குறிப்பு : சிலருடைய மோசமான அனுபவங்கள் எல்லாம் உதாரணங்கள் அல்ல.

அனுபவம் 1

அனுபவம் 2

அனுபவம் 3

அனுபவம் 4

நான் விற்ற பிறகு ஐடிபிஐ பங்கு ஜகஜோதியாய் மேலே சென்று 175 வரைக்கும் போனது இப்போது 170ரூபாய்க்கு வியாபாரமாகிறது.

பிறகு ஒரு நாள் நடந்ததை எல்லாம் நினைத்து என்ன என்ன தப்பு செய்தோம் என நானே கண்டுபிடித்து சில வரைமுறைகளை வகுத்து தீர்மானங்களை கொண்டுவந்தேன்.

அதில் முக்கியமான் ஒன்று UTI Securities நமக்கு ராசியில்ல அதை மொதல்ல மாத்தி வேற ப்ரோக்கரேஜ்க்கு போயிடனும். இது எப்படி இருக்கு ச்சும்மா அதிருதில்ல.

--
--

UTI Securities நமக்கு ராசியில்ல அதை மொதல்ல மாத்தி வேற ப்ரோக்கரேஜ்க்கு போயிடனும் இந்த முடிவெடுக்க காரணம் அவங்க தினமும் போன் செய்து இதை வாங்குங்க அதை வாங்குங்கன்னு டிப்ஸ் மேல டிப்ஸ் தொல்லை தாங்க முடியலை.

இன்னொரு சுமுஹுர்த்த சுபதினத்தில் ICICI Securities ல் ஆரம்பித்து கடந்த மாதம் வரை ஓடிக்கொண்டிருந்தது. ஐசிஐசிஐ-ல் என் ஒரே பிரச்சனை அவர்களிடம் ப்ரோக்கரேஜ் ஜாஸ்தி டெலிவரி ட்ரேட்க்கு 0.75 சதவிகிதம் சேல்ஸ் டாக்ஸ், செக்யூரிடி ட்ரான்ஸாக்ஷன் டாக்ஸ் எல்லாம் சேர்ந்து 1 சதவிகிதம் வந்துவிடும். அதாவது பத்தாயிரம் மதிப்புள்ள எதாவது ஒரு நிறுவன பங்கை வாங்கும் போது நூறு ரூபாய் விற்கும் போது நூறு ரூபாய். பத்தாயிரம் ரூபாய்க்கு பங்கு வாங்கி விற்கும் போது இருநூற்று ஐம்பது ரூபாய் லாபம் வந்தால் இறுநூறு ரூபாய் ப்ரோக்கரேஜ் என்ன கொடுமை இராதாகிருஷ்ணன் இது.

பிப்ரவரி 2007ல் இருந்து அக்டோபர் வரை ஆன ப்ரோக்கரேஜ் 20,000 ரூபாய்கள் ( ஜனவரி வரை ட்ரேட் செய்தது யூடிஐ செக்யூரிடீஸ்-ல்).

மிக சமீபமாக ரிலையன்ஸ் மணிக்கு மாறியிருக்கிறேன் 20 நாட்கள் ஆகிறது 2500 ரூபாய் முதலிலேயே கட்டிவிட்டால் 5.4 கோடி இன்ட்ரா டே + 60 லட்சம் டெலிவரி ட்ரேட் மொத்தமாக ஆறு கோடி ரூபாய்க்கு இலவசமாக செய்து கொள்ளலாம்.

விவரமான ப்ரோகரேஜ் இந்த லிங்கில் பார்க்கவும்.

சரி நான் முதல் முதலில் வாங்கிவிற்ற பங்கின் இன்றைய விலை எவ்வளவு தெரியுமா கர்னாடகா பாங்க் ரூ200 வருடத்தின் அதிக பட்ச விலை ரூ250,
ப்ரஜ் இண்டஸ்ட்ரீஸ் போனஸ் ஸ்ப்லிட் எல்லாம் கணக்கில் சேர்த்து இன்றைய மதிப்பு ரூ1000க்கும் மேல் டிவிடண்ட் கணக்கில் சேர்க்காமல்.

என்னத்த செய்ய அவ்வ்வ்வ்வ்வ்

சரி ரொம்ப ப்ளேடு போட்டுட்டேன்னு எனக்கே நல்லா தெரியுது. இதோட நிறுத்திக்கிறேன் இந்த தொடரை. வந்தவர்களுக்கும் வாழ்த்தியவர்களுக்கும் நன்றி வணக்கம்.

Posted in Labels: |

என் அனுபவங்கள் -4

குறிப்பு : சிலருடைய மோசமான அனுபவங்கள் எல்லாம் உதாரணங்கள் அல்ல.

அனுபவம் 1

அனுபவம் 2

அனுபவம் 3


ஒரு சுபமுஹூர்த்த சுபதினத்தில் என் ஆபீஸ்க்கு வந்த மார்க்கெட்டிங் ஆளிடம் மாட்டி UTI Securities ல் டீமேட் ஆரம்பித்தேன். அப்போதெல்லாம் என்னிடம் கம்ப்யூட்டர் இல்லை, போன் செய்து பங்கை வாங்க சொல்வது / விற்க சொல்வது அல்லது அவர்கள் அலுவலகத்திற்கு சென்று ட்ரேட் செய்வது (ஆஃப் லைன் ட்ரேடிங்). அதற்கு முன்னரே வாரன் பப்பட் எல்லாம் இணையம் மூலமாக ஓரளவு அறிமுகமாகியிருந்தார்கள்.

முதன்முதலாக ட்ரேட் செய்யபோகிறேன் எந்த பங்கை வாங்குவது என்பதில் ரொம்ப ரொம்ப குழப்பமாக இருந்தது. பெரும்பாலோருக்கு முதல் ட்ரேட் செய்யும் போது இந்த குழப்பம் இருக்கும் என நம்புகிறேன். அதனால் UTI Securities அலுவலகத்திற்கே போய்விட்டேன் எனக்கு முன்னால் ஒருவர் "கர்னாடகா பாங்க்" பங்கு வாங்க சொன்னார். நானும் போய் இனிப்பு கடையில் எனக்கும் ஒரு கிலோ அதே குடுத்திடுங்க ரேஞ்சுக்கு அதையே 100 வாங்கினேன். அப்போது அந்த பங்கின் விலை மிக சரியாக 107 ரூபாய்.

என் நல்ல நேரமோ என்னமோ தெரியலை 120ரூபாய்க்கு வெளியே வந்துவிட்டேன். அடுத்ததாக நான் வாங்கிய பங்கு "ப்ரஜ் இன்டஸ்ட்ரீஸ்" அதன் விலை 110 ரூ வெளியேறிய விலை 115 அதிலும் லாபம். ஸ்டாக் மார்க்கெட்டில் கோடி ரூபாய் சம்பாதித்தது போல இருந்தது.

நடந்தேன் என சொல்வதை விட மிதந்தேன் என்றுதான் சொல்லவேண்டும். வாரன் பப்பட் நீண்ட கால முதலீடு எல்லாம் மறந்தே போய்விட்டது. இப்போது நினைத்து பார்த்தால் எத்தகைய முட்டாள்தனத்தை செய்திருக்கிறேன் என தெளிவாக தெரிகிறது.

குருட்டான் போக்கில் செய்த இரண்டு 'ட்ரேட்' களும் வெற்றி. சரி எப்பதான் நான் சந்தையிடம் பாடம் கற்றுக்கொள்வது.

எனக்கு பாடம் புகுத்திய பங்கு ஐடிபிஐ. 2006 ஜனவரி என நினைக்கிறேன் அதை பரிந்துரைத்தது UTI Securities நான் வாங்கும்போது அதன் விலை 105 கொடுக்கப்பட்ட டார்கட் 115 ஸ்டாப்லாஸ் 100.

இந்த காலகட்டத்தில் நிறைய படித்தும் பலருடன் பேசியும் தெரிந்து கொண்டதில் ஸ்டாப்லாஸ் ஒவ்வொருவரின் ரிஸ்க் கெபாசிடியை பொறுத்து மாறும் நிறைய ரிஸ்க் எடுத்தால் நிறைய லாபம் கிடைக்கும்னெல்லாம் புரிஞ்சிகிட்டு அவங்க குடுத்த ஸ்டாப்லாஸை காத்தில விட்டாச்சு. விலையோ இறங்கிகிட்டே வருது.

CNBC TV18 ஒரே சானல் தான் பாக்கிறது. நான் பேச்சிலர் என்பதால் சேனல் மாத்தனும் கோலங்கள் பாக்கனும்னு தங்கமணி தொல்லை எல்லாம் இல்லை. சில நாட்கள் நைட் ஷிப்ட் முடிந்து இரவு 2.30க்கு வீட்டுக்கு போய் டிவியை ஆன் செய்து NASDAQ மார்க்கெட்டெல்லாம் பார்ப்பேன். அதாவது முத்திபோயிடிச்சுன்னு சொல்லுவாங்களே அது மாதிரிதான் இருந்தேன்.

IDBI விலை 100, 90, 80 , 70 ன்னு குறைஞ்சுகிட்டே வருது நானும் ஆவரேஜ் பன்னறேன்னு இருக்கிற காசுக்கெல்லாம் வாங்கி குமிச்சிகிட்டே இருக்கேன். இருக்கிற மத்த ஷேர் எல்லாம் கூட வித்து இதை வாங்கினேன் 70க்கு கீழயும் போச்சு ஆனா நான் ஆவரேஜ் பன்றதை நிறுத்திட்டேன் போர்ட்போலியோல இருக்கிறது இது ஒரு ஷேர் மட்டும்தான் ஏறக்குறைய 650 ஷேர் கைல இருந்து போட்ட முதல் 50,000 மார்க்கெட் விலையோ 30,000 சரி இது நமக்கு சரிபட்டு வராதுன்னே முடிவு கட்டி கொஞ்ச நாள் அந்த பக்கமே போகாம சும்மா சுத்திகிட்டிருந்தேன் ஒருவழியா 48ரூ வரைக்கும் போய் தரைய தட்டி மெல்ல மேல்ல 80 ரூபாய்க்கு வந்த உடனே மொத வேலையா எல்லா பங்கையும் வித்துட்டேன். நோ லாஸ் நோ ப்ராபிட் இதற்கு எடுத்துகொண்ட காலம் 10 மாதங்கள்.

(தொடரும்)

Posted in Labels: |

என் அனுபவங்கள் -3

குறிப்பு : சிலருடைய மோசமான அனுபவங்கள் எல்லாம் உதாரணங்கள் அல்ல.

அனுபவம் 1

அனுபவம் 2

மூன்றாவது வருடம் அதாவது 2004ல் உடன் வேலை செய்யும் நண்பர் ஒருவர் ம்யூச்சுவல் பண்ட் ELSS (Equity Linked Saving Scheme)ஐ ஆபீஸில் சப்மிட் செய்ததை பார்த்தேன். அது என்ன ஏது என்று அவரை கேட்க அதெல்லாம் எனக்கு ஒன்னும் தெரியாது என் சித்தப்பா இப்படி செய்ய சொன்னார் செஞ்சேன்னு முடிச்சிகிட்டார்.

அதன் பிறகு அதை பற்றி கூகுள் ஆண்டவரிடம் சொல்லி தேடு தேடு என தேடி பல விசயங்கள் படித்தேன் ஆனாலும் ஒரு பயம் கடைசி லைன்ல இருக்குமே Returns are subject to Market Risk , Past performance is not guarantee to the future performance அதையெல்லாம் பாத்துட்டு. ஆனால் மார்க்கெட்டில் என்ன நடக்கிறது என்பதை தினமும் கவனித்து படித்து வந்தேன்.

கொஞ்சம் பயம் தெளிந்து முதல்முதலில் நான் செய்த முதலீடு Fidelity Equity Fund (G)ல் 6,500ரூபாய்கள் NFOல். அப்போது மார்க்கெட் 8000 பாயிண்ட்டுகள் என நினைக்கிறேன் முதலீடு செய்த பணம் 8500 ஆன உடன் வெளியே வந்துவிட்டேன்.

பிறகு 'டாக்ஸ்' க்காக PRU ICICI TAX PLAN ல் ஒரு SIP ஆரம்பித்தேன். எதோ என் நல்ல புத்தி இன்றும் அதை தொடர்ந்து வருகிறேன். அதை ஆரம்பிக்கும்போது அது 5 ஸ்டார் ரேட்டிங்கில் இருந்தது இப்போது இல்லை வெறும் 3 ஸ்டார்தான் ஆனாலும் அது MID CAP FOCUSED FUND நீண்ட காலம் அதில் தொடர்ந்து முதலீடு செய்து வரும் போது நல்ல ரிடர்ன் இருக்கும் என உள்ளுக்குள் ஒரு பட்சி சொல்கிறது.

சந்தை சரிந்தது அப்பாடா நல்ல சமயத்தில் தான் Fidelity Equity Fundல் இருந்து வெளியேறியிருக்கிறேன் என ஒரு இருமாப்பும் வந்தது. சந்தை சரிவை பயன் படுத்தி Pru ICICI Emerging STAR 20,000 ரூபாய்க்கு வாங்கினேன் (இதுவும் மிட்கேப் ஃபோகஸ்ட் ஃபண்ட்) இரண்டு மாதத்திற்கும் குறைவான நேரத்தில் 22,000 ரூபாயாக வெளியேறினேன் சொல்லபோனால் என் முதல் ட்ரேட் இதுதான்.

இதன்பிறகு பலதரப்பட்ட பரீட்சாத்த முயற்சிகள் ஆனால் எல்லாம் ம்யூச்சுவல் பண்ட்டிலேயே நடத்தி வந்தேன். Moneycontrol.com ல் எதாவது புதுப்புது கட்டுரைகள் வந்து கொண்டே இருக்கும். அப்படி ஒரு நாள் வரவில்லை என்றால் கூட படித்த கட்டுரையை திரும்ப படிப்பேன் இல்லை என்றால் ராத்திரி தூக்கம் வராது :-)

Posted in Labels: |

என் அனுபவங்கள் -2

குறிப்பு : சிலருடைய மோசமான அனுபவங்கள் எல்லாம் உதாரணங்கள் அல்ல.

அனுபவம் 1

அந்த காலத்தில் அதாவது 1998 - 1999 களில் DTP சென்டருக்கு நல்ல மரியாதை இருந்தது, பிசினஸ் இருந்தது. மாதம் பத்திலிருந்து இருபதாயிரம் அதற்கு மேலும் வருவாய் இருந்தது அந்த காலத்தில் இது மிகப்பெரிய தொகை. சாப்ட்வேர் கம்பெனிகள் எல்லாம் இந்த அளவு சென்னையைகூட எட்டி பார்க்காத நேரம். டிகிரி படித்தவர்களே இரண்டாயிரம் மூவாயிரம் சம்பளத்திற்கு வர தயாராக இருந்தார்கள்.

சொந்த ஊரில் அவன் பிசினஸ் செய்து வந்ததால் வீட்டு வாடகை இல்லை சாப்பாட்டு செலவு இல்லை என பல advantage. நான் சென்னையில் வாடகை, சாப்பாட்டு செலவு போக்குவரத்து செலவு என சம்பளத்தில் முக்கால்வாசி பணத்தை செலவு செய்துகொண்டிருந்தேன்.

அவனுடைய அபார திறமையான நிர்வாகத்தால் ஒரே வருடத்தில் இரண்டு மூன்று லட்ச ரூபாய் கடன்காரனாகி கடையை அம்போவென விட்டுவிட்டு ஊரை விட்டு எங்கோ போய்விட்டான்.

எவ்வளவுதான் நெருங்கிய நண்பனாக இருந்தாலும் கடன் கொடுக்ககூடாது என பாடம் கற்றுக்கொண்டேன். அதற்கு நான் கொடுத்த விலை ரூ 15,000 ஏறக்குறைய ஒரு வருட சேமிப்பு அது. நல்ல வேளையாக அவனுக்கு ஜாமீன் எதுவும் நான் போடவில்லை.

அதன்பிறகு சேமிப்பு என நான் செய்தது போஸ்ட் ஆபீஸில் மாதம் 1000 ரூபாய்க்கான RD ஐந்து வருடத்திற்கு அப்போது அதற்கு 9.5 சதவீதம் வட்டி கிடைத்தது. அப்போதெல்லாம் இந்த பங்கு சந்தை, ம்யூச்சுவல் பண்ட் எல்லாம் எனக்கு என்று இல்லை என் ஊரில் 99% ஆட்களுக்கு எதுவும் தெரியாது. அந்த மீதி 1% ஆட்களும் என் ஊரில் இல்லை :-))

இப்படி போய்கொண்டிருக்கும்போது வேலை மாற்றலாகி 2002ல் மங்களூருக்கு வந்தாச்சு. இப்பதான் இன்கம் டாக்ஸ் கட்டுகிற அளவுக்கு சம்பளம். டாக்ஸ் தவிர்க்க சீனியர் எல்லாரும் LIC தான் போடுவார்கள் இல்லை என்றால் ICICI அல்லது IDBI இன்ப்ரா ஸ்டரக்சர் பாண்ட் எடுப்பார்கள் அதற்கு 5 முதால் 6 % வருட வட்டி + டாக்ஸ் பெனிபிட் கிடைக்கும். நானும் முதல் இரண்டு வருடங்களுக்கு இந்த பாண்ட் வாங்கி ஆபீசில் விவரங்களை கொடுத்து TDSஐ குறைத்து வந்தேன்.

(தொடரும்)

Posted in Labels: |