பொன்மொழி1

பங்குசந்தை என்பது பணம் பண்ண வேண்டிய இடமே அன்றி தேவையில்லாமல் ரிஸ்குகளை எடுக்கும் இடம் அல்ல.


வாய்ப்புகளுக்காக காத்திருங்கள். குறைவாக ட்ரேட் செய்யுங்கள்.


Market is a place where to make money not for taking unnecessary risk / thrills. Trade less.

Posted in Labels: |

சந்தை நிலவரம் 19-05-09

சென்செக்ஸ் 20000 இருந்தபோது ஒருவரும் கீழே இறங்கும் என நம்பவில்லை 25,000 போகும் என்றுதான் நம்பினார்கள் சென்செக்ஸ் 8000க்கு விழுந்த போது மீளும் என ஒருவரும் நம்பவில்லை 6000 போகும் என்றே நம்பினார்கள் வாங்கிய விலையில் இருந்து 20 - 30% லாபம் இருந்தால் விற்று கண்டிப்பாக ஃப்ராபிட் புக் செய்ய வேண்டும்.

நேற்று காலை வர்த்தகம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே 10% சர்க்யூட் ட்ரிக்கராகி இரண்டு மணிநேரமும் பின்னர் 20% சர்க்யூட் ட்ரிக்கராததால் நாள் முழுவதும் வர்த்தகம் நிறுத்தப்பட்டது. சென்செக்ஸ் 2110 புள்ளிகளும் ( 17.3 சதவீதம் ), தேசிய பங்கு சந்தையில் நிப்டி 651 புள்ளிகளும் ( 15.05 சதவீதம் ) உயர்ந்திருந்தது.

நேற்று 20% சந்தை உயர்ந்திருந்தாலும் வாலயூம் அவ்வளவாக இல்லாததால் நேற்றைய உயர்வு உண்மையான உயர்வா என சந்தேகம் அனைவருக்கும் இருந்தது.

இன்று 19-5-09 காலை 11 மணிக்கு சென்செக்ஸ் நேற்றைய மதிப்பிலிருந்து 150 புள்ளிகள் அதிகரித்து 14425 என்ற நிலையிலும் நிஃப்டி 10 புள்ளிகள் அதிகரித்து 4332 என்ற நிலையிலும் வர்த்தகமாகி வருகிறது , இது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிற ஒன்றாகும்.

மக்கள் காங்கிரசஸ் கட்சிக்கு மிக பெரிய வெற்றியை - ( லல்லு, இடதுசாரிகள்,மாயாவதி,முலாயன் சிங் ஆதரவு தேவைப்படாத அளவுக்கு ) தந்துள்ளதால், முதலீட்டாளர்கள் மிகுந்த வரவேற்பை பங்கு மார்கெட்டில் காட்டியுள்ளனர்

பங்குசந்தை 8000 - 10000 புள்ளிகள் இருக்கும் போது நம்பிக்கையுடன் வாங்கியவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Posted in |

NIFTY டெக்னிகல் அனலிசிஸ்

NIFTY டெக்னிகல் அனலிசிஸ்

சீக்ரெட் ஃபார்முலா ஆஃப் நிப்டி. யார்கிட்டயும் சொல்லிடாதீங்க

Posted in |

எந்த புத்துல எந்த பாம்பு இருக்கோ!?

நம்பிக்கைகளை சீர்குலைத்த புதுவருட ஆரம்பம் 2009.

உயர்வு வந்தால் தாழ்வும் வரும்
தாழ்வு வந்தால் உயர்வு வரும்

சத்யம்

ஆனால் இப்படி தரைமட்டத்திற்கு எதுவுமே இல்லாத அளவிற்கு போகும் என யாரும் கனவுகூட கண்டிருக்க மாட்டார்கள். சந்தைகளை கட்டுப்படுத்தும் உயர் அதிகாரங்களை கொண்ட செபி கோர்ட் வாசலில் அனுமதிகேட்டு கையேந்தி நிற்கிறது அனுமதி இல்லையாம் வேதனை :(

இந்தியாவில் பங்கு சந்தையில் ட்ரேடாகும் பல நிறுவனங்களில் வெளிப்படையான தன்மை இல்லை. வேறு வழியில்லாமல் ராமலிங்க ராஜூ உண்மையை சொல்லியிருக்கிறார். இன்னும் பல ராமலிங்க ராஜூக்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள். அவர்களும் உண்மை சொல்லும் நேரம் வரலாம்.

செபியின் பெயராலேயே போலியாக பிரமிட் சாய்மிராவிற்கு கடிதம் எழுதி அந்த பங்கில் விளையாடி இருக்கிறார்கள் அதற்காக காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இன்னும் எப்படி எல்லாம் மோசடி செய்யப்போகிறார்களோ :(

விசாரணை கமிஷன் என வருடங்களை இழுத்தடிக்காமல் சட்ட திட்டங்களை கடுமையானதாக்கி இவர்களுடைய சொத்துக்களை முடக்கி கடும் தண்டனை அளித்தால்தான் சிறு முதலீட்டாளர்களுக்கு இனி சந்தை மீது சிறிதளவாவது நம்பிக்கை வரும் ஆனால் அதெல்லாம் நடக்கப்போவதில்லை அது வேறு விசயம்.

ஐ.டி
"வரவு எட்டணா செலவு பத்தணா கடைசியில் துந்தனா" இந்த பாடலின் அர்த்தம் இப்போது பலருக்கும் புரிந்திருக்கும் அதுவரையில் சந்தோஷம். அவள் விகடனில் இந்த வாரம் வந்திருக்கும் கட்டுரை "பகட்டிலிருந்து பட்டினிக்கு" முடிந்தால் ஒருமுறை வாசியுங்கள்.

வராக் கடன்களால் (bad debts) லாபம் மிகவும் குறைந்து வெறும் 3 சதவிகித வளர்ச்சி அடைந்திருக்கிறதாம் ஐசிஐசிஐ வங்கி. பொறுப்பில்லாமல் கடன்களை வாரி வழங்கினால் வேற என்ன ஆகும். இப்படி செய்ததால்தான் அமெரிக்கா திவால் ஆகி இருக்கிறது. கே.வி காமத் ஐயா கொஞ்சம் பாத்து பண்ணுங்க சாமி :(

ரியல் எஸ்ட்டேட் விலை ஏறாமல் இருந்தாலும் இன்னும் விலை குறையவில்லை இன்னும் சில மாதங்கள் ஆகலாம் :))

இன்னும் எந்த புத்துல எந்த பாம்பு இருக்கோ!? :(

சென்செக்ஸ் என்ன ஆகும்??

சென்செக்ஸ் இப்போது down ward நடந்துகொண்டிருப்பது 1980ல் தொடங்கிய cyle -ன் நான்காவது பகுதி. ஐந்தாவது up-ward ல் சென்செக்ஸ் 25,000க்கும் அதிகமான புள்ளிகளுக்கு போகுமாம்.

சென்செக்ஸ் இன்னும் கீழே சென்றால் 9700 வரை செல்லுமாம் அது சரி இன்னும் எத்தனை நாள் இப்படியே இருக்கும்?

எலியட் வேவ் தியரிப்படி correction ஆனது அதற்கு முந்தைய up move ன் 0.33 ல் இருந்து 1.618 மடங்கு கால அளவுக்குள் இருக்குமாம் அதாவது 16 முதல் 77 மாதங்கள்.

இதற்கு முந்தைய correction 1994 ல் இருந்து 2003 வரை 9 வருடங்கள்.

9700க்கு கீழே சென்செக்ஸ் குறைகிறது எனும்பட்சத்தில் விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கும்.

FII தொடர்ந்து விற்று வருவதால்தான் இந்த அளவு வீழ்ச்சி அடைந்துள்ளது என அனைவருக்கும் தெரியும் இன்னும் 8 பில்லியன் அளவு அவர்களுடைய முதலீடு வரும் நாட்களில் வெளியேறலாம்

மேலும் விவரமாக ஆங்கிலத்தில் படிக்க இங்கே

இண்வெஸ்டர் மைண்ட்
Posted in |

பணத்தை இழப்பது ஏன்?

பங்குச்சந்தையில் பெரும்பாலோனோர் பணத்தை இழப்பது ஏன்?. இந்த பதிவில் புதிதாக ஒன்றும் இல்லை ஏற்கனவே பெரும்பாலானவை முந்தைய பதிவுகளில் சொல்லப்பட்டவைதான். பல்வேறு காரணங்களை இதற்கு சொல்லலாம் என்றாலும் முக்கியமான மூன்று

1. பேராசை
2. நிதானமின்மை
3. அதிகப்படியான ரிஸ்க் எடுத்தல்

பங்குச்சந்தையில் பல்வேறு முறைகளில் பங்குவர்த்தகம் செய்ய முடிந்தாலும் உதாரணத்திற்கு Delivery based trade, Margin trading, Margin Plus trading, F&O , Commodities , Buy today sell tomorrow (BTST) எவை உங்களுக்கு நன்கு தெரியுமோ அவை மட்டுமே செய்ய வேண்டும்.

சில தொலைக்காட்சி சானல்களில் டை கட்டிக்கொண்டு நாங்கதான் சந்தை ஜோசியர்கள் (அனலிஸ்ட்டாம்) என்று ஆருடம் சொல்பவர்களை தவிருங்கள். அடிப்படையில் நல்ல பங்குகளை சந்தை சரிவை பயன்படுத்தி வாங்குங்கள். நீங்கள் வைத்திருக்கும் பங்கை பற்றிய தகவல்களை நிறைய படியுங்கள். அதிர்ஷ்டத்தை நம்பி சந்தைக்கு வராதீர்கள்.

சந்தையில் பணம் சம்பாதிப்பது மிக கடினம் ஆனால் பணத்தை விடுவது மிக எளிது. சந்தையில் வர்த்தகம் செய்யும் எவருக்கும் இந்த உண்மை கண்டிப்பாக தெரியும். உங்களுக்கென ஒரு வழிவகை வகுத்துக்கொண்டு (make a set of rules) அதை கண்டிப்பாக பின்பற்றினால் வெற்றி நிச்சயம்.


"share market is a place where money gets transfers from un-patient people to patient people" - Warren Buffet

Posted in Labels: |