புதியவர்களுக்காக - 5

புதியவர்களுக்காக - 5



பவர் ஆப் அக்குமுலேசன் (Power of accumulation)

இது ரொம்ப நாள் முன்பு இணையத்தில் படித்த ஆங்கில கட்டுரையின் தமிழாக்க முயற்சி.

ஒரு ஊரில் ஒரு அரசன் இருந்தான் அவனை புகழ்ந்து பாடிய புலவனிடம் பரிசில் என்ன வேண்டுமோ கேள் என அரசன் அகங்காரத்துடன் சொன்னான். அதற்கு அந்த புலவர் அரசனின் அகம்பாவத்தை அழிக்கவேண்டும் என எண்ணி அரசே எனக்கு பெரிதாக எதுவும் வேண்டாம் சதுரங்க பலகை இருக்கிறதல்லவா அதில் 1ம் கட்டத்தில் ஒரு நெல்மணி தாருங்கள் 2ம் கட்டத்தில் 2, 3ம் கட்டத்தில் 2ம் கட்டத்தில் எவ்வளவு இருக்கிறதோ அதை அதே எண்ணால் பெருக்கினால் எவ்வளவு வருகிறதோ அத்தனை நெல்மணி தாருங்கள், 4வது கட்டத்தில் 3ம் கட்டத்தில் எத்தனை உள்ளதோ அதே எண்ணால் பெருக்க கிடக்கும் எண்ணிக்கை இது போன்று அந்த 64 கட்டத்தில் எவ்வளவு பிடிக்கிறதோ அது போதும் என சொன்னார்.

பொன்னோ பொருளோ கேட்பார் என எண்ணியிருந்த அரசனும் புலவனை எள்ளி நகையாடி சரி என சொல்லிவிட்டான் சதுரங்க பலகையும் வந்தது.

1வது கட்டம் = 1 நெல்மணி

2வது கட்டம் = 2 நெல்மணி

3வது கட்டம் = 4 நெல்மணி

4வது கட்டம் = 16 நெல்மணி

5வது கட்டம் = 256 நெல்மணி

6வது கட்டம் = 65636 நெல்மணி

7வது கட்டம் = 4294967296 நெல்மணி

8வது கட்டம் = 18446744073709551616 நெல்மணி

9வது கட்டம் = 18446744073709551616 X 18446744073709551616 நெல்மணி

சொன்ன வாக்கை காப்பாற்றவில்லை என்றால் என்ன அரசன் இந்த 9 கட்டத்திற்குள்ளாகவே அவன் நாட்டில் இருந்த அனைத்து நெல் மணிகளும் காலியாகிவிட்டது.

அரசன் புலவரின் புத்தி சாதுரியத்தை மெச்சி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான் என போகும் அந்த கதை.

சரி இந்த கதைக்கும் முதலீடு / பங்கு வர்த்தகம் பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்றால் நம் முதலீடும் அப்படித்தான் எவ்வளவுக்கு எவ்வளவு சிறு வயதில் ஆரம்பிக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு பல்கி பெருகும் (வட்டி குட்டி போடும், அந்த குட்டியும் குட்டி போடும் அப்படி).

சரி இந்த கட்டுரை படித்த உங்களுக்கு சின்ன home work

9வது கட்டம் = ??
10வது கட்டம் = ??
..
..
64வது கட்டம் = ??

சும்மா கணக்கு போட்டு பாருங்க

டிஸ்கி : சேமிப்பை சிறு வயதிலிருந்தே துவக்குங்கள்

Posted in Labels: |

இன்சூரன்ஸ் -2

இன்சூரன்ஸ் முதல் பகுதி படிக்காதவங்க இங்க க்ளிக் பண்ணுங்க.

யூலிப் எனப்படும் யூனிட் லிங்க்ட் இன்சூரன்ஸ் ப்ளான் பற்றி தெரிந்துகொள்ள தென்றலின் பதிவுக்கு இங்க க்ளிக் பண்ணுங்க. யூலிப் பற்றிய இந்த பதிவுக்கு திரு. ஏவிஎஸ் அவர்களின் பின்னூட்டமும், நான் எழுதிய பின்னூட்டமும் மீள் பதிவு செய்யப்படுகிறது. (ஒரு பேக்கப் தானுங்க)



ஏவிஎஸ்
said...
ULIP திட்டத்தின் சாதக பாதகங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

நான் மூன்றாண்டுகளுக்கு முன் பஜாஜ் அலயன்சின் ULIP திட்டத்தில் சேர்ந்தேன். இந்த ஆண்டு என் மூன்றாண்டு முதலீடுகளும் எவ்வளவு பணம் ஈட்டியிருக்கிறது என்று பார்க்கும் போது ஆண்டுக்கு 8 சதவிகிதத்தை தாண்டவில்லை. இத்தனைக்கும் நான் எனது ULIP முதலீட்டில் 80% பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்திருந்தேன்.

இந்த மூன்றாண்டும் பங்குச் சந்தை அபாரமாக வளர்ந்தும் எனது ULIP முதலீடு பெருகாததற்கு காரணங்கள்

1. முதலாண்டில் எனது முதலீட்டில் 70 சதவிகிதம் முகவர் கமிஷனுக்கும் (30%), பஜாஜ் அலயன்ஸ் நிர்வாகச் செலவுகளுக்கும் போய் விட்டது

2. ஒவ்வொரு மாதமும் எனது ஆயுள் காப்பிற்கான தொகை முதலீட்டிலிருந்து கழிக்கப்பட்டு விடுகிறது. அதாவது உங்களுக்கு ULIP ஆயுள் காப்பீடு 1 லட்சம் என்றால், அதற்கான மாதக் கட்டணம் மாதம் ரூ 200 இருக்கலாம். அதை நீங்கள் செலுத்தும் தொகையிலிருந்து கழித்து விட்டு மீதிப் பணம்தான் முதலீடு செய்யப்படுகிறது.

3. ULIP முதலீட்டிற்குள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு திட்டத்திற்கும் 5% வருடாந்திர சேவைக் கட்டணம் வசூலிருக்கிறார்கள். இது தவிர, முதல் மூன்றாண்டுகளில் பஜாஜ் அலயன்ஸ் சேவைக் கட்டணமாக 3% வருடா வருடம் வசூலித்து விடுகிறது. பரஸ்பர நிதிகள் இந்த மாதிரி வசூலிப்பது 2% சதவிகிதத்தை தாண்டினாலே அது அதிகம் என்கிறார்கள். முதலீட்டில் ஆண்டொன்றுக்கு 5-8% இப்படி வீணாவது முறையன்று. அதிலும் முதலீடுகள் நஷ்டமடையும் ஆண்டுகளில், இந்த கட்டணங்கள் முதலுக்கே பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தும். நீங்கள் ஒரு ஆண்டு முதலீடே செய்யாவிட்டாலும் ஏற்கனவே உங்களது கணக்கில் இருக்கும் முதலில் இருந்து இந்தக் கட்டணங்களுக்கான பணத்தை எடுத்துக் கொள்வார்கள்.

4. ULIP திட்டத்தில் வரிச் சலுகை இருப்பது உண்மைதான். ஆனால், அந்த வரி சலுகை உங்களுக்கு வருமானம் 5 லட்சத்திற்கு கீழே இருந்தாலும், நீங்கள் ஆயுள் காப்பீட்டிற்காக செலுத்தும் தொகை 1 லட்சத்திற்கு கீழே இருந்தாலும் மட்டுமே

எனது பஜாஜ் அலயன்ஸ் ULIP அனுபவத்தை வைத்துப் பார்த்தால், ULIP-ஐ விட பரஸ்பர நிதித் திட்டங்களில் மாதாமாதம் முதலீடு செய்வதுதான் சாலச் சிறந்தது. கடந்த மூன்றாண்டுகளில் எனது பரஸ்பர நிதி முதலீடுகள், ஆண்டொன்றுக்கு 20 முதல் 70 சதவிகிதம் பணம் ஈட்டியிருக்கின்றன. அவற்றை நான் என் விருப்பப்படி எப்போது வேண்டுமானாலும் விற்கலாம்.

சந்தையின் போக்குகளையும், எனது நிதி நிலைமையையும் வைத்து கூடுதலாகவோ, குறைவாகவோ முதலீடு செய்யலாம். இந்த வசதிகள் ULIP-ல் கிடையாது.




மங்களூர் சிவா
said...

என்னை பொருத்தவரை ULIP என்பது ஓர் ஃப்ராட் திட்டம்.

மக்கள் இன்சூரன்ஸ் காப்பீடு என்றால் என்ன. ஏன் வேண்டும். நமக்கு எவ்வளவு தேவை மற்றும் இன்வஸ்ட்மெண்ட் இரண்டையும் தனி தனியாக பிரித்து பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும்

எல்.ஐ.சி யின் அன்மோல் ஜீவன் தவிர எந்த ஒரு திட்டமும் ப்யூர் இன்சூரன்ஸே கிடயாது.இதில் 5 லட்ச ரூபாய் காப்பீட்டுக்கு 30 வயது உடயவருக்கு வருடத்திற்கு ப்ரீமியம் சுமார் 1750 ரூபாய்தான்.

இதே அளவு காப்பீடுக்கு வேறு திட்டங்களில் மணி பேக் ஆகட்டும், யூலிப் ஆகட்டும் குறைந்த பட்சம் 20,000 முதல் 25,000 ரூபாய் கட்ட வேண்டும்

5 லட்சத்திற்கு ஒரு அன்மோல் ஜீவனும் ப்ரீமியம் ரூ 1750 மீதி 17,250 ஐ பங்கு சந்தையில் நேரடியாகவோ அல்லது ம்யூசுவல் ஃபண்ட் திட்டங்களிலோ போட்டுவந்தால் முதலீட்டின் மேல் வருடததிற்கு 20 முதல் 25 சதவிகிதம் வருமானம் எதிர் பார்க்க முடியும்.


Note : Concept of Insurance, Functioning of Insurance எல்லாம் படித்ததால், மற்றும் அத்துறையில் இருக்கும் சிலர் தொடர்பு இருந்ததாலும், இன்சுரன்ஸ் மற்றும் இன்வ்ஸ்மெண்ட் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்ற ஆதங்கத்தாலும் Fraud என்று சொல்லியிருப்பேன்

Fraud என்பது தகாத வார்த்தையாக இருந்திருக்கலாம் ஆனால் எனக்கு இன்னும் சரியான வார்த்தை கிடைக்கவில்லை.

MARKET JOKE

SEBI - new rule - along with Pan card , client must subbmit ECG & Cardic report to trade in NSE and BSE

Posted in |

இன்சூரன்ஸ்

நூறு கோடி மக்கள் வசிக்கும் இந்தியாவில் ஆயுள் காப்பீடு செய்து கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை இரண்டு கோடி மட்டுமே. அந்த இரண்டுகோடி மக்களிலும் பாதிக்கு மேற்பட்ட மக்கள் ஆயுள் காப்பீடு செய்து கொள்வதை ஒரு வகையான சேமிப்பாக - முதலீடாக, வரிச்சலுகை பெறுவதற்கான வசதியாக கருதிதான் அதில் பணம் போடுகிறார்கள்.

ஆயுள் காப்பீடு ஏஜென்ட் தொடர் தொந்தரவுக்காக மட்டும் பாலிஸி எடுப்பவர்களும் உண்டு. லைஃப் இன்ஸ்யூரன்ஸ் என்பது நமது குடும்பத்தினருக்காக நம்மை நம்பி இருப்பவர்களுக்காக நாம் செய்கின்ற கடமை. அவர்களுக்காக கண்ணியமாக நாம் செய்கின்ற செலவு அது.

அது நிச்சயமாக ஒரு முதலீடோ அல்லது சேமிப்போ கிடையாது. இன்றைக்கு இன்ஷுரன்ஸ் எல்லாவற்றிற்க்கும் வழங்கப்படுகிறது. நமது உயிர்,உடமை,தொழில் ஏன் நமது உடல் உறுப்புக்களைக்கூட இன்சூர் செய்து கொள்ளும் வசதி இருக்கிறது. இந்தியாவில் 13 பொது துறை இன்ஷுரன்ஸ் கம்பெனிகளும் மற்றும் பல தனியார் இன்ஷுரன்ஸ் நிறுவனங்களும் உள்ளன.

மரணம் என்றோ ஒரு நாள் நம் வாசலைத் தட்டும். அது இன்றாகவும் இருக்கலாம். மரணம் நிச்சயம் என்பதைத் தவிர வேறு எதுவும் நிச்சயம் இல்லை. தனது வருமானத்தினாலேயே தனது குடும்பத்தின் வாழ்வச்சு சுழல்கிறது என்ற நிலையில் இருக்கும் குடும்பத் தலைவர்கள்கூட ஒருவேளை எனது மரணத்திற்குப் பிறகு எனது குடும்பத்தின் நிலை என்ன என்று ஒரு நிமிடம், ஒரே ஒரு நிமிடம்கூட சிந்திப்பதில்லை.

ஆயுள் இன்சூரன்ஸின் தேவையை உணர்ந்து இன்ஷுரன்ஸ் பாலிஸி எடுத்துக் கொள்பவர்களில்கூட 40 சதவீதத்தினருக்கும் மேற்பட்டவர்கள் அந்த பாலிஸியைத் தொடர்வதில்லை. இதற்கான காரணம் பெரும்பாலானவர்கள் எண்டோமென்ட் பாலிஸி எடுக்கிறார்கள். ஏஜெண்டுகளும் அவர்களுக்கு எண்டோமெண்ட் பாலிஸிகளில் 40 சதவிகிதத்திற்கும் அதிகமாக கமி­சன் கிடைக்கிறது என்பதற்காக அவற்றையே பரிந்துரை செய்கிறார்கள். இதற்கு அவர்கள் சொல்லும் காரணம்; இந்த ரக பாலிஸி எடுத்தால் பாலிஸி காலம் முடியும்போது நீங்கள் கட்டிய பணம் போனஸுடன் திரும்பக் கிடைக்கும் என்று ஒரு பெருந்தொகையைச் சொல்வார்கள். பொருளாதாரம் படித்தவர்கள்கூட அவர்கள் சொல்வதைப் பரிசீலனை செய்து பார்ப்பதில்லை என்பது விந்தைதான்.

வங்கியில் பிக்ஸட் செய்கிற பணத்திற்கு என்ன வட்டி கொடுப்பார்களோ, ஏறக்குறைய அதே வட்டிதான் போனஸாக எண்டோமெண்ட் பாலிஸிமூலமாக நமக்குக் கிடைக்கிறது. இந்தியாவினுடைய சராசரி பணவீக்கமான (Money Inflation) 5 சதவிகிதத்தை கணக்கில் எடுத்துப் பார்த்தால் நமக்கு அவர்கள் எண்டோமென்ட் பாலிஸியின் கால முடிவில் கிடைப்பதாகச் சொல்லும் பணம் ஏறக்குறைய நாம் பிரிமியமாக செலுத்துகின்ற பணத்தின் இன்றைய மதிப்பின் அளவில் மட்டுமே அன்றைக்கு இருக்கும் என்பது புரியும்.

நாம் பியூர் ரிஸ்க பாலிஸிகளையே எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் கட்ட வேண்டிய பிரிமியம் எண்டோமெண்ட் பாலிஸி பிரிமியத்தை விட பல மடங்கு குறைவு. ஆனால் இதில் பிரிமியமாக செலுத்தப்படுகிற பணம் திரும்பக் கிடைக்காதுதான். இருப்பினும்கூட பாலிஸிதாரர் பாலிஸி காலத்தில் மரணம் அடைந்தால் ஒரு பெரும் தொகை அவரது குடும்பத்தினருக்கு கிடைக்கும்.

நமது காருக்கு நாம் இன்ஷுரன்ஸ் எடுக்கும்போது... நமது கார் ஆக்ஸிடெண்ட் ஆகவில்லை என்றால் பிரிமியமாக செலுத்திய பணம் வீணாகப் போய்விடுமே என்று கருதுவதில்லை. விலை மதிப்பற்ற நமது உயிருக்கு பியூர் ரிஸ்க் இன்ஸ்யூர் (Pure Risk Insure) செய்து கொள்ளும்போது பிரிமியமாகச் செலுத்தும் பணம் தண்டம் என்று கருதுவது, கண்ணியமான சிந்தனை இல்லை. இன்ஸ்யூரன்ஸ் என்பது சேமிப்போ, முதலீடோ இல்லை. நான் அப்படித்தான் கருதுவேன்....

Posted in Labels: |

வரலாற்றை திரும்பி பார்ப்போம் - 2

இது ஜூன் 4 , 2006 ல் வெளியான பதிவு முத்து தமிழினி என்பவர் எழுதியது.

சில நாட்களுக்கு முன் இந்திய பங்கு சந்தைகளில் வரலாறு காணாத வீழ்ச்சி ஏற்பட்டது. நிதி அமைச்சர் சிதம்பரம் தலையிட்டு கவலைப்பட ஒன்றுமில்லை என்று அறிக்கை விட்டார்.ஒவ்வொரு முறை பங்கு சந்தை விழும்போதும் சிதம்பரம் இவ்வாறு அறிக்கை விடுவது வாடிக்கையாகிவிட்டது.ஒரு நிதி அமைச்சர் இவ்வாறு தலையிட்டு கருத்து கூறுவது சரியா என்பது ஒரு புறமிருக்க கம்யூனிஸ்டு தலைவர்கள் விடும் அறிக்கைகளால்தான் பங்கு வர்த்தகம் சரிவை சந்திப்பதாக ஒரு சாரார் கூறிவருகின்றனர்.

வெளியிலிருந்து பார்க்கும் கோயிஞ்சாமியாக எனக்கு தோன்றும் சில சந்தேகங்களை வைப்பதுதான் என் நோக்கம். பங்கு குறியீட்டு எண் வரலாறு காணாத அளவு ஏறிக்கொண்டே சென்றபோது பத்தாயிரம் எல்லாம் கம்மி என்றும் பதினாறாயிரம் வரை இந்த வருடமே ஏறும் என்றெல்லாம் பல வல்லுனர்களும் கருத்துக்கூறி வந்தனர்.இந்திய பொருளாதாரம் அந்த அளவு வலிமை வாய்ந்தது என்றெல்லாம் பல ஆதாரங்களை அள்ளிவிட்டு இவர்கள் கருத்துக்கூறி வந்தனர்.

கடந்த சில வாரங்களாக பங்குகள் சரிய ஆரம்பித்தவுடன் இவர்கள் கூறுவது என்னவெனில் மும்பை சென்செக்சின் உண்மையாக மதிப்பு 7800 - 8000 புள்ளிகள்தான் என்றும் இப்போது இருக்கும் 10000+ புள்ளிகள் நிலையே அதிகம் என்கிறார்கள். அரசியல் வாதிகள் கணக்காக பொருளாதார மேதைகளும் உளறிகொட்டுவதை பார்க்க மிக காமெடியாக உள்ளது.பங்கு மார்க்கெட் ஐந்தாயிரம் புள்ளிகளை தாண்டுமபோதே ரீடெய்ல் இன்வஸ்டர்ஸ் என்று அழைக்கப்படும் நம்மை போன்ற கோவிஞ்சாமிகளில் பலர் பங்குகளை விற்றுவிட்டார்கள்.பிறகு மார்க்கெட் நன்றாக ஏறியபின் உள்ளே நுழைந்த கோவிஞ்சாமிகள் பலர் கையை சுட்டுகொள்வது எதிர்ப்பார்க்கக்கூடியதே.

இப்போது கோயிஞ் சாமிகளான நாம் எந்த நிலையை எடுப்பது? சிதம்பரம் சொல்கிறார் என்று பங்குகள் வாங்குவதா ?நாக்கில் நரம்பில்லாமல் பேசும் இந்த பொருளாதார மேதைகளை நம்பி இவர்கள் அழும்போது அழுவதும் இவர்கள் சிரிக்கும்போது சிரிப்பதும் நமக்கு தேவையா?இன்னொரு புறம் வெளிநாட்டு பணம் ஏகப்பட்டது இந்தியாவில் வந்து குவிந்து இதனால் செயற்கையாக ஏற்றப்பட்டதுதான் பங்கு வர்த்தகம் என்ற கருத்தும் நிலவுகிறது.அதுவும் உண்மை என்றுதான் தோன்றுகிறது.

கடந்த சில வாரங்களில் மிகப்பெரிய தொகையை இந்த வெளிநாட்டு வியாபாரிகள் வெளியே எடுத்துள்ளார்கள். இதற்கே பங்கு மார்க்கெட் ரணகளமாகி உள்ளது. இந்த அழகில் பென்சன் நிதியை பங்கு மார்கெட்டில் முதலீடு செய்ய{இப்போதைக்கு ஐந்து சதவீதத்தை மட்டும்} அரசாங்கம் நினைப்பதாகவும் அதற்கு கம்யூனிஸ்டுகளும் தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அரசாங்கம் அலுத்துக்கொள்கிறது.

வழக்கம் போல் ஆங்கில மீடியாக்கள் ரொம்ப ஃபீல் செய்கின்றன.(இந்தியாவில் உள்ள ஆங்கில மீடியாக்களை போல் அயோக்கியர்கள் யாரும் இல்லை என்பது என் சொந்த கருத்து}.வயதான காலத்தில் நிம்மதியாக வாழ்வது என் ஒரே அடி்ப்படையில்தான் பென்சன் முதலான சலுகைகளை நம்பி சம்பளம் குறைவு என்றாலும் அரசாங்க வேலையில் சேர்கிறார்கள். இந்த பென்சன் பணத்தையும் பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்து யாரோ சாப்பிட்டுவிட்டு சென்றால் அது யாருக்கு லாபம்? எத்தனையோ அரசாங்க பாண்டுகள், செக்யூரிட்டுக்கள் ஆகியவை பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்புகளை அளிக்கின்றன.

இதனால்தான் கம்யூனிஸ்டுகள் இதை எதிர்க்கிறார்கள்.அவர்கள் இருப்பும் நாட்டிற்கு அவசியம்தான் என்று தோன்றுகிறது.இந்த அழகில் கேபிடல் அக்கவுண்ட் கன்பர்டபிளிட்டி என்று நமது ரூபாயை எங்கு வேண்டுமானாலும் மாற்றக்கூடிய அளவில் செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சிதம்பரம் அண்ட் கம்பெனி மன்னாரு அண்ட் கம்பெனி கணக்காக அறிக்கை கொடுக்கிறது.

நல்லவேளை இதை ஏற்கனவே பல பொருளாதார நிபுணர்கள் எதிர்த்து உள்ளனர். பணவீக்கவிகிதம் என்று கூறி அரசாங்கம் வாரவாரம் ஒரு அறிக்கை வெளியிடுகிறது.இதன் அடிப்படையில் பல பொருளாதார முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அந்த மதிப்பீட்டையே குறைகூறியும் அரசாங்கம் அதில் தகிடுதத்தம் செய்கிறது என்று கூறியும் ஒரு கட்டுரையை நான் படித்தேன்.என்ன நடக்கிறது இந்த நாட்டில்?கோவிஞ்சாமிகளை காப்பாற்றுவது யார்?

இந்த பதிவிற்க்கு திரு. செல்லமுத்து குப்புசாமி எழுதிய பின்னூட்டம்

நிதியமைச்சர் ஒருவர் தினசரி பங்கு விலைகளைக் கண்காணித்து அறிக்கை விடுவது பேரவலம். அவருக்கு இதனை விட முக்கியப் பொறுப்புகள் இருக்குமெனக் கருதுகிறேன்.

விலை உயரும் போது மார்தட்டும் சந்தைகள் (BSE & NSE), செபி, அரசு, அந்தந்த நிறுவனங்கள் எல்லாம், விலை சரியும் போது வேறு காரணங்களைத் தேடுகின்றனர். அதுவும் ஒரு அவலம். கிரிக்கெட் மேட்ச் ஜெயிக்கும் போது ஆட்டக்காரர்கள் செய்யும் தவறுகள் அனைத்தும் மறக்கப் படுகின்றன. அதே சமயத்தில் அணி தோல்வியைச் சுவைக்கும் போது, சிறப்பான ஆட்டம் கூட விமர்சிக்கப் படுகிறது.

அதே போலத் தான் பங்குவிலையும்.. ஏறும் போது இறங்கும் போதும் அதற்குக் காரணம் கற்பிப்பதற்காத்தான் மிகப் பெரிய கூட்டம் கழுத்தில் 'டை'யைக் கட்டிக் கொண்டு சி.என்.பி.சி.யில் இரைச்சலைக் கிளப்புகிறது.

பிறரது ஆலோசனையின் பேரிலோ அல்லது சுய முடிவின் அடிப்படையிலோ நாம் முதலீடுகளைச் செய்து விட்டு அரசாங்கம் விலையச் சரியாமல் பாதுகாக்க வேண்டும் என எதிர்பார்ப்பது அறிவீனம் மட்டுமில்லாது பேராசையும் கூட.

Warren buffett once said, "Stock market is somewhat like a god. He rewards when you do good things. But, unlike real god he does not forgive on mistakes; rather punishes hard".

முத்து, நீங்கள் திறந்த வெளிச் சந்தை அமைப்பை ஒட்டுமொத்தமாக எதிர்ப்பதாகவும், பொதுவுடமைத் தனத்தை மாற்றமின்றி ஏற்பதாகவும் அறிகிறேன். அது குறித்து விவாதிக்க இங்கே இடம் போதாது. தனியாக வைத்துக் கொள்ளலாம்.

கேபிடல் அக்கவுண்ட் கன்பர்டபிளிட்டி' குறித்தான் உங்களது பார்வை என்னை மகிழச்செய்கிறது. தமிழ்மணத்தில் இது போன்ற விடயங்களை விவாதிக்க எவருமில்லை என எண்ணியிருந்தேன்.

Fundamental analysis & technical analysis என எத்தனை இருந்தாலும் maas psycology தான் சந்தையை இயக்குகிறது. 2005 மே மாதம் முதல் 2006 மே வரை சென்செக்ஸ் நிறுவனங்களின் செயல்பாடு சுமார் 25% (அதிகபட்சமாக) உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் குறியீடு 6,000 இல் இருந்து 12,000 ஐத் தொட்டது.

இதையெல்லாம் பார்க்காமல் சூதாடி விரலைச் சுட்ட பின் பிறரைக் குறை சொல்வது ஆரோக்கியமானதல்ல. குறியீடு உச்சத்தில் இருக்கும் போது இந்தியப் பங்குகளில் பணம் போட்ட (விரலைச் சுட்ட) அந்நிய முதலீட்டு நிறுவனங்களும் இல்லாமலில்லை. ஆனால் அவர்களது மொத்த நிதியில் அது சிறிய விழுக்காடாகவே இருந்திருக்கும். இன்னும் நிறையப் பேசலாம்.. இப்போதைக்கு இது போதும்..

இன்று மட்டுமின்றி என்றுமே, பணவீக்கத்தை விட, வங்கிகள் தரும் வட்டியை விட நீண்ட கால அடிப்படையில் பங்கு முதலீட்டில் (not trading & speculation) அதிகமான வளர்ச்சியை ஈட்ட முடியும் என நம்புகிறேன். அதற்காக நிரம்ப உழைக்க வேண்டியிருக்கும்.

-குப்புசாமி செல்லமுத்து

Posted in Labels: |

வரலாற்றை திரும்பிப் பார்ப்போம்

இந்திய பங்கு சந்தையில் கடந்த வருடங்களில் நடந்த நடைபெற்ற பழைய வரலாற்றை திரும்பிப் பார்ப்போம்.

கீழே உள்ள வலையில் இருக்கும் அனைத்து பதிவுகளும் படிக்க வேண்டியவை எனவே லிங்க் மட்டும் கொடுத்துள்ளேன்.

http://sadhayam2.blogspot.com/

Posted in Labels: |

புதியவர்களுக்காக - 4

பங்கு சந்தையை பொருத்தவரை எவ்வளவுக்கு எவ்வளவு விரைவாக கற்றுக்கொள்கிறோமோ அவ்வளவு நல்லது.

தவறுகள் செய்ய செய்ய நம் முதலீட்டின் / லாபத்தின் அளவை இழக்கிறோம். எல்லா விசயங்களையும் நாம் அனுபவித்துதான் தெரிந்துகொள்ளவேண்டும் என்பது இல்லை.

சில வருடங்களுக்கு முன் தமிழ்சசியின் பதிவில் படித்த ஒரு விசயம் நினைவிற்கு வருகிறது. பங்கு சந்தை சூதாட்டமா? எனும் தலைப்பில் அவர் எழுதியது. சீட்டாட்டம் ஒரு சூதாட்டம் அதற்கே நாம் எவ்வளவோ விதிமுறைகளை வைத்துள்ளோம் 13 சீட்டுதான் போட வேண்டும், ஒரு ஒரிஜினல் ரம்மி இருக்க வேண்டும், முதலிலேயே கவிழ்த்துவிட்டால் வெறும் 20 பாயிண்ட்கள் ஃபுல் என்றால் 80 பாயிண்ட்கள் இப்படி பல.

சூதாட்டத்திற்கே இவ்வளவு விதிமுறைகள் இருக்கும் போது பங்கு வர்த்தகத்தில் நாம் எந்த விதிமுறையையும் பின்பற்றாமல் நடந்தால் தோல்வியே மிஞ்சும்.

எனவே நிறைய படியுங்கள். படித்தவற்றிலிருந்து சில விதிமுறைகளை ஏற்பாடுத்திக்கொள்ளுங்கள். அதை மீறாமல் நடந்து வெற்றி பெறுங்கள்.

நண்பர் ஒருவரின் பங்கு சந்தை அனுபவங்கள். படிக்க வேண்டிய அருமையான பதிவு லிங்க் கீழே

http://rktimes.blogspot.com/2007/10/blog-post_17.html

http://rktimes.blogspot.com/2007/10/blog-post_18.html

Posted in Labels: |

MARKET CRASH HOW TO HANDLE

வாரத்தில 2 நாட்கள் நைட் ஷிப்ட் அதாவது ராத்திரி 8.00மணிக்கு போனா அதிகாலை2.00 - 2.30க்கு வீட்டுக்கு வந்திடலாம். சாதாரனமாக நைட் ஷிப்ட் இல்லாத நாட்களில் காலை 7 மணிக்கு வாக்கிங் போவதை வழக்கமாக கொண்டுள்ள உள்ள எனக்கு நேற்று நைட் ஷிப்ட் இல்லாத போதும் இன்று அலாரம் அடிக்கும் போது எழ முடியவில்லை சரி ஈவ்னிங் வாக் போலாம் என நினைத்து தூங்கி எழும்போது காலை 9.00 மணி.( இது எதாவது instinctஆ என தெரியவில்லை)

டிபன் சாப்பிட்டு மெதுவாக ICICIDIRECT ஆன்லைன் ட்ரேடிங் போர்டல் ஓப்பன் செய்தால் போர்ட்போலியோ மதிப்பு தாறுமாறாக இருக்கு. ட்ரேடிங் குவான்டிடி அப்டேட் ஆகவில்லை. சரி இது எதோ ICICI போர்டல் ப்ராப்ளம் என நினைத்து மற்ற வணிகதளங்களை செக் செய்யும் போது தெரிந்தது சென்செக்ஸ் 1700 புள்ளிகள்ள் சரிவு 10% down side circuit filter triggered in NSE அதனால் பங்கு வர்த்தகம் 1 மணி நேரம் தடை செய்யப்பட்டுள்ளது.

11மணிக்கு திரும்ப வர்த்தகம் துவங்கியது ஆச்சரியமூட்டும் விதமாக 1400 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ் 18715.82 (-336) புள்ளிகளில் முடிந்தது.

இதற்குமுன் இது போல 2006 மே மாதம் மார்க்கெட் க்ராஷ் ஏற்பட்டு பங்கு வர்த்தகம் 1 மணி நேரம் நிறுத்திவைக்கப்பட்டது.சாதாரனமாக நான் Day Trade செய்வதில்லை. சில சமயம் என் holdingல் இருக்கும் பங்குகளில் செய்வேன். இல்லாத பங்குகளில் Margin trade செய்வதில்லை. ஒரு காலத்தில் அதை மட்டுமே செய்துகொண்டிருந்தேன். அவ்வளவு ரிஸ்க் மற்றும் நேரத்தை விரயம் செய்தும் பெரிதாக ஒன்றும் சாதிக்க முடியவில்லை. Day Trade தவறில்லை அது இல்லை என்றால் கையில் இருக்கும் பங்குகளை பணமாக மாற்ற முடியாது.

சரி மார்க்கெட் க்ராஷ்க்கும் Margin Tradingக்கும் உள்ள சம்பந்தம் என்ன என்றால் இது அணுப்பிளவு மாதிரிதான் எல்லா ஸ்டாப் லாஸ்களும் ஒரே நேரத்தில் trigger ஆகி (எரிகிற தீயில் பெட்ரோல் ஊற்றுவதை போல) ஏற்கனவே இறங்கிக்கொண்டிருக்கும் சந்தையை குப்புற தள்ளும்.

இதில் நஷ்டப்படுவவர்கள் இந்த Day traders தான். Quality Stockகளில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு சிறிது நஷ்டம் ஏற்பட்டாலும் விரைவில் அந்த பங்கின்விலை மேலே வந்துவிடும்.

சரி இப்போது என்ன செய்யவேண்டும் முதலாவது

1. Dont Panic.
2. Be patience
3. Cash is the only defensive weapon so sit in cash.
4. If you feel quality stock available at reasonable / cheap price buy in small quantity.
5. Investment is not a one time act. It is continous process.

Winners are not quitters.

All the best.

Posted in Labels: |

MARKET TIMINGS

FROM TODAY ONWARDS,
THE MARKET WILL STRAT AND CLOSE AS NORMAL -
I.E 9.55 AM TO 3.30 PM

10 October 2007

Posted in Labels: |

புதியவர்களுக்காக-3

பங்கு வாங்கியாகி விட்டது. அதை எப்படி தொடர்ந்து கண்காணிப்பது எனவும் பார்த்தாகி விட்டது. இனி செய்ய வேண்டியது என்ன?ஜாக்கிரதையாய் இருப்பதுதான்.

யாரிடம் ஜக்கிரதையாய் இருக்க வேண்டும்? பங்கு சந்தையிடம்.

வாரன் பப்பட் பங்கு சந்தையை பற்றி மிஸ்டர் மார்க்கட் என்ற பெயரில் சுவரசியமாக ஒரு கதை சொல்லுவார். அந்த கதையை விட்டுவிட்டு அதில் உள்ள கருத்தை மட்டும் சொல்லுகிறேன். "Market is always correct.market is perfect " என்ற ஒரு மாயை பங்கு சந்தையில் நிலவுகிறது. பப்பட் அது தவறு என்கிறார். பங்கு சந்தை பெர்பெக்டாக இருந்திருந்தால் நான் இன்னும் ஏழையாக தான் இருந்திருப்பேன் என்கிறார். பப்பட்டின் வார்த்தைகளில் Market is not awlays correct.It is at times correct.There is a difference between both these views. The difference is like that between day and night.

பங்கு சந்தையின் விலை உண்மை விலையை விட அதிகமாக இருக்கும்போது பேசாமல் இருக்க சொல்கிறார். பங்கு சந்தை விலை உண்மை விலையை விட குறைவாக இருக்கும்போது பங்குகளை வாங்க சொல்கிறார். பங்கு விலை குறைந்தால் தான் அவர் மகிழ்வார்.கடையில் பொருள் விலை குறைந்தால் வாடிக்கையாளருக்கு மகிழ்ச்சி தானே? அது போல் தான் இதுவும் என்கிறார் பப்பட்.

நிறைய கம்பனிகளின் பங்குகளை வாங்குவதையும் அவர் ஆதரிக்கவில்லை. 20 கம்பனிகளின் பங்குகளுக்கு மேல் அவர் வாங்கமாட்டார். நாம் இன்னும் குறைவாக தான் வாங்க வேண்டும்.ஒரே கம்பனியில் பணம் போடுவதும் தவறு. 10 நல்ல கம்பனிகளை கண்டறிந்த பிறகு மேலும் பணம் போடவேண்டுமென்றால் அந்த 10லேயே போடலாம் அல்லவா? 11வது கம்பனி எதற்கு என கேட்கிறார் பப்பட். "which is the right time to sell?"' என்ற குழப்பம் பங்கு சந்தை துறைகளில் உண்டு. பப்பட் இதற்கு தெளிவான பதில் வைத்திருக்கிறார். NEVER என்பது தான் அவரின் பதில்.

நம்மால் அப்படி செய்ய முடியாமல் போனாலும் குறைந்தது 10 - 20 வருடங்களுக்கு வாங்கிய பங்கை விற்கக் கூடாது. பப்பட் இதற்கு வீட்டை உதாரனம் சொல்கிறார்.10 லட்சம் தந்து வீடு வாங்குகிறோம்.வாங்கிய மறுநாள் சந்தை மதிப்பு 11 லட்சம் ஆகிறது. லட்ச ரூபாய் லாபம் கிடைக்கிறது என்பதற்காக வீட்டை விற்போமா? சந்தை விலையை பற்றி கவலைப்படவே மாட்டோம் அல்லவா? அதுபோல் தான் பங்குகளும் என்கிறார் பப்பட்

புதியவர்களுக்காக - 2

ஒரு நிறுவனத்தின் பங்கை வாங்குவதற்கு முன் அந்த நிறுவனம் பற்றி அதன் செயல்பாடுகள், லாபம் ஈட்ட கூடிய வழிகள், அதன் கடந்த ஆண்டுகளின் லாப நட்ட கணக்கு, P/E , EPS போன்றவற்றை ஆரய்ந்து பின்னர் வாங்க வேண்டும். இவை எல்லாம் http://www.nseindia.com/, http://www.bseindia.com/ மற்றும் பல இணையதளங்களில் கிடைக்கும்.

விலை குறைவாக இருக்கிறது என ஊர் பேர் தெரியாத கம்பெனி குப்பை பங்குகளை வாங்காதீர்கள்.

அவசர தேவைகளுக்காக என இருக்கும் பணத்தை ஷேர்களில் முதலீடு செய்யாதீர்கள். குறைந்த பட்சம் ஒரு ஆண்டிலிருந்து மூன்றாண்டுகள் காத்திருக்க முடியும் எனும் பட்சத்தில் முதலீடு செய்வது நல்லது.

கண்ணை மூடிக்கொண்டு நண்பர்கள் சொன்னார்கள் (TIPS), வேறு யாரும் சொன்னார்கள் என்று எதையும் வாங்காதீர்கள்.

எவ்வளவுதான் நல்ல நிறுவனமாக இருந்தாலும் எல்லா பணத்தையும் ஒரே நிறுவன பங்குகளில் முதலீடு செய்யாதீர்கள். வேறு வேறு துறைகளில் உள்ள நல்ல நிறுவனங்களின் பங்குகளில் பிரித்து முதலீடு செய்வதால் ஒரு நிறுவன பங்கு நன்றாக செயல்படாமல் நட்டம் ஏற்பட்டாலும் வேறு நிறுவன பங்குகள் நட்டத்திலிருந்து காப்பாற்ற உதவும். உதாரணத்திற்கு சாப்ட்வேர் என்றால் டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ் டெலிகாம் என்றால் ரிலயன்ஸ் கம்யூனிகேசன், பார்தி ஏர்டெல், இஞ்சினியரிங் துறை என்றால் எல்&டி, பி.எச்.இ.எல்.

உங்களுக்கு பங்கு சந்தை பற்றி நல்ல அனுபவம் வரும் வரை தின வர்த்தகம் (Day Trading) செய்யாதீர்கள்.

வாங்கிய பங்கு குறைந்த காலத்திலேயே 10 - 15 சதவிகிதம் லாபம் அடைந்திருந்தால் பங்குகளில் ஒரு பகுதியை விற்று பணத்தை தயாராக வைத்திருப்பது நல்லது. விலை குறந்தால் திரும்பவும் வாங்கலாம். விலை குறையவில்லை என்றாலும் பாதகமில்லை.

தொடர்ந்து பங்கு சந்தையில் என்ன நடக்கிறது என்பதை பற்றி தொலைகாட்சி, பத்திரிகை, இணையம் மூலமாக படித்து கவனித்து வாருங்கள்.

வாங்க பணம் பண்ணலாம் , ஸ்டார்ட் மியூஜிக்.

என்னுடைய இன்னொரு வலைப்பூ பார்க்க இங்க க்ளிக் பண்ணுங்க.

புதியவர்களுக்காக

எல்லாரும் ஷேர் மார்க்கட்ல பணம் எக்கச்சக்கமா சம்பாதிக்கறாங்க நாமும் சம்பாதிப்போம் அப்படின்னு குருட்டான்போக்கில இறங்கினால் நஷ்டம்தான் மிஞ்சும். ஒன்றை உடனடியாக பத்தாக்குவதற்கு ஷேர்மார்க்கட் ஒன்றும் சூதாட்டகளம் அல்ல.

பங்கின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கத்திற்கு முக்கிய காரணம் Law of Demand and Supply அதாவது வாங்குபவர்கள் அதிகம் இருந்து விற்பவர்கள் குறைவாக இருந்தால் பங்கின் விலை ஏறும் அதே போல வாங்குபவர்கள் குறைவாக இருந்து விற்பவர்கள் அதிகம் இருந்தால் விலை சரியும்.

நிறுவனத்தின் நிர்வாகம் நன்றாக இருந்து லாபம் ஈட்டுவது, புதிய கம்பெனிகளை வாங்குவது (acquisitions) போன்ற சமயங்களில் நிறைய பேர் அந்த நிறுவன பங்கை வாங்க முயலும் போது (Demand) பங்கின் விலை ஏறும்.

நிறுவனத்தின் நிர்வாகம் சரியாக இல்லாமல் இருந்து அல்லது வேறு காரணங்களால் ஈட்டும் லாபம் குறைவது போன்ற சமயங்களில் பங்கை விற்க நிறைய பேர் முயலும் போது (Supply) விலை குறையும்.

பங்கின் விலை ஏற்ற இறக்கத்திற்கு இது மட்டுமே காரணம் அல்ல. வரும் பதிவுகளில் பார்ப்போம்.

என்னுடைய இன்னொரு வலைப்பூ பார்க்க இங்க க்ளிக் பண்ணுங்க.