எந்த புத்துல எந்த பாம்பு இருக்கோ!?

நம்பிக்கைகளை சீர்குலைத்த புதுவருட ஆரம்பம் 2009.

உயர்வு வந்தால் தாழ்வும் வரும்
தாழ்வு வந்தால் உயர்வு வரும்

சத்யம்

ஆனால் இப்படி தரைமட்டத்திற்கு எதுவுமே இல்லாத அளவிற்கு போகும் என யாரும் கனவுகூட கண்டிருக்க மாட்டார்கள். சந்தைகளை கட்டுப்படுத்தும் உயர் அதிகாரங்களை கொண்ட செபி கோர்ட் வாசலில் அனுமதிகேட்டு கையேந்தி நிற்கிறது அனுமதி இல்லையாம் வேதனை :(

இந்தியாவில் பங்கு சந்தையில் ட்ரேடாகும் பல நிறுவனங்களில் வெளிப்படையான தன்மை இல்லை. வேறு வழியில்லாமல் ராமலிங்க ராஜூ உண்மையை சொல்லியிருக்கிறார். இன்னும் பல ராமலிங்க ராஜூக்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள். அவர்களும் உண்மை சொல்லும் நேரம் வரலாம்.

செபியின் பெயராலேயே போலியாக பிரமிட் சாய்மிராவிற்கு கடிதம் எழுதி அந்த பங்கில் விளையாடி இருக்கிறார்கள் அதற்காக காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இன்னும் எப்படி எல்லாம் மோசடி செய்யப்போகிறார்களோ :(

விசாரணை கமிஷன் என வருடங்களை இழுத்தடிக்காமல் சட்ட திட்டங்களை கடுமையானதாக்கி இவர்களுடைய சொத்துக்களை முடக்கி கடும் தண்டனை அளித்தால்தான் சிறு முதலீட்டாளர்களுக்கு இனி சந்தை மீது சிறிதளவாவது நம்பிக்கை வரும் ஆனால் அதெல்லாம் நடக்கப்போவதில்லை அது வேறு விசயம்.

ஐ.டி
"வரவு எட்டணா செலவு பத்தணா கடைசியில் துந்தனா" இந்த பாடலின் அர்த்தம் இப்போது பலருக்கும் புரிந்திருக்கும் அதுவரையில் சந்தோஷம். அவள் விகடனில் இந்த வாரம் வந்திருக்கும் கட்டுரை "பகட்டிலிருந்து பட்டினிக்கு" முடிந்தால் ஒருமுறை வாசியுங்கள்.

வராக் கடன்களால் (bad debts) லாபம் மிகவும் குறைந்து வெறும் 3 சதவிகித வளர்ச்சி அடைந்திருக்கிறதாம் ஐசிஐசிஐ வங்கி. பொறுப்பில்லாமல் கடன்களை வாரி வழங்கினால் வேற என்ன ஆகும். இப்படி செய்ததால்தான் அமெரிக்கா திவால் ஆகி இருக்கிறது. கே.வி காமத் ஐயா கொஞ்சம் பாத்து பண்ணுங்க சாமி :(

ரியல் எஸ்ட்டேட் விலை ஏறாமல் இருந்தாலும் இன்னும் விலை குறையவில்லை இன்னும் சில மாதங்கள் ஆகலாம் :))

இன்னும் எந்த புத்துல எந்த பாம்பு இருக்கோ!? :(