புதியவர்களுக்காக - 6
Posted On Thursday, November 8, 2007 at at 9:09 PM by மங்களூர் சிவாபுதியவர்களுக்காக - 6
பங்கிலிருந்து வருமானம்
சமசீர் பங்கு (Equity)
ஈக்விடி ஒரு நிறுவனத்தில் நமது வரையறுக்கப்பட்ட உரிமையினை குறிக்கிறது. எவ்வளவு அதிகமான ஈக்விடி ஷேர் உள்ளதோ அந்த அளவு அதிக உரிமை. ஒரு நிறுவனத்தின் பங்கு வைத்திருப்பது என்பது ஷேர் வைத்திருக்கும் பல்லாயிர கணக்கானவர்களில் நீங்களும் ஒருவர். வைத்திருக்கும் பங்கின் அளவை பொருத்து நிறுவன எல்லா சொத்துக்களிலும் நீங்களும் ஒரு உரிமையாளர் (this means technically, you own a portion of every piece of furniture, trademark, contract, etc of the company).
உரிமையாளர் என்ற முறையில் நிறுவன வருமானம், ‘வோட்’டிங் உரிமை (Voting rights) போன்றவை உங்களுக்கு உண்டு. இன்னொரு முக்கியமானது நிறுவனம் சரியாக இயங்காமல் கடன் போன்றவை ஏற்பட்டால் ஈக்விடி ஷேர் ஹோல்டர்கள் அதற்கு பொறுப்பாளர்கள் அல்ல. அதிக பட்சமாக அந்த பங்கு விலை குறைந்து நாம் போட்ட முதலீடு நஷ்டமடையும்.
பங்கிலிருந்து வருமானம்
1. முதலீடு பெருகுதல் (Capital Appreciation)
பொதுவாக இந்த பங்குகள் NSE / BSE ல் லிஸ்ட் செய்யப்பட்டு வர்த்தகம் நடைபெறும் அப்போது பங்குகளின் விலை நிறுவன செயல்பாடுகள், லாப/நஷ்டம், புதிய ஒப்பந்தங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் ஏறி இறங்கும் வாங்கிய விலையை விட அதிகமாக இருக்கும் போது விற்பது இது முதலீடு பெருகுதல் (Capital Appreciation) எனப்படுகிறது.
2. போனஸ் ஷேர்கள் (Bonus Shares)
நிறுவனம் நன்றாக செயல்பட்டு லாபம் ஈட்டும் போது போனஸ் ஷேர்கள் அறிவிக்கப்படலாம். எல்லா நிறுவனங்களும் இது போல அறிவிப்பதில்லை அதனால் பங்குகளை தேர்ந்தெடுக்கும்போது அதன் கடந்த வருடங்களின் செயல்பாடுகளை கவனிக்க வேண்டியது மிக முக்கியம்.
3.ரைட்ஸ் (Rights Issue)
ரைட்ஸ் ஷேர்கள் இது நிறுவனங்கள் பின்பற்றும் இன்னொரு முறை. அதாவது நிறுவனம் புதியதாக வெளியிடும் பங்குகளை ஏற்கனவே அந்நிறுவன பங்குகளை வைத்திருப்பவர்களுக்கு குறைந்த விலைக்கு கொடுக்கும். இந்த ஷேர்களையும் நிறுவனத்திடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி வெளி மார்க்கெட்டில் மார்க்கெட் விலைக்கு விற்க்கலாம்.
4. டிவிடெண்ட் (Divident)
நிறுவனம் ஈட்டிய லாபத்தை அதன் பங்கு வைத்திருப்பவர்களுக்கு டிவிடெண்ட்டாக கொடுக்கலாம். இங்கும் கவனிக்க வேண்டியது கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை எல்லா நிறுவனங்களும் கொடுப்பதும் இல்லை. பங்குகளை வாங்கும்போதே இதை எல்லாம் கவனித்து வாங்க வேண்டும்.
பங்கு தேர்ந்தெடுக்கும் முறைகள் (Strategies)
1. பங்கின் விலை அடிப்படையில் வாங்குவது
அடிப்படையில் நல்ல ஒரு நிறுவனத்தின் (fundamentally strong company) பங்கு விலை குறைவாக இருக்கும் போது வாங்குவது. உதாரணத்திற்க்கு இப்போது IT பங்குகள்.
2. டிவிடெண்ட் தரும் பங்குகள்
தொடர்ந்து டிவிடெண்ட் கொடுக்கும் பங்குகளை வாங்குவது. நிறுவனம் நன்கு செயல்பட்டு லாபம் ஈட்டினால்தான் டிவிடெண்ட் தொடர்ந்து கொடுக்க முடியும் எனவே கடந்த வருடங்களில் டிவிடெண்ட் தொடர்ந்து கொடுத்து வந்த நிறுவன பங்குகளை கவனித்து விலை குறையும் போது வாங்கலாம்.
3.டைவர்சிபிகேசன் (Diversification)
மொத்த முதலீட்டையும் ஒரே நிறுவன பங்குகளை வாங்கக்கூடாது (Diversification). அதற்க்காக Diversification செய்கிறன் என 20 – 30 நிறுவன பங்குகளையும் வாங்க கூடாது (over diversification) அதை follow செய்வது கடினம்.
பங்கு வர்த்தகத்தில் அபாயங்கள் (Risks)
முதலாவது வட்டி விகிதங்கள் அதிகரித்தல், Inflation, ஆட்சி மாற்றங்கள், போர் அபாயங்கள் போன்றவை.
இரண்டாவது நிறுவனத்தின் துறை சார்ந்த காரணிகள் (Industry Risk), ஸ்ட்ரைக், உற்பத்தியை பெருக்கும் புதிய தொழில் நுட்பங்களை நிறுவனம் அமல்படுத்தாமல் இருப்பது இதனால் அதே துறையில் உள்ள வேறு நிறுவனங்களின் உற்பத்தி அதிகரித்து நாம் முதலீடு செய்துள்ள நிறுவன லாபம் குறைவது போன்றவை. முதலீடு செய்துள்ள நிறுவன செயல்பாடுகளை கவனிக்காமல் இருப்பதும் ஒரு risk அதனால் அந்நிறுவன செயல்பாடுகள் பற்றி தொடர்ந்து கவனித்து வரவேண்டும்.
Happy Investing.