என் அனுபவங்கள் -1

குறிப்பு : சிலருடைய மோசமான அனுபவங்கள் எல்லாம் உதாரணங்கள் அல்ல

நம்ம ராதாகிருஷ்ணன் அண்ணாச்சி ஒரு பதிவு போட்டிருந்தார் பக்கத்து சீட்ல சனி பாகம்1, பாகம்2 ன்னு அதுல அவருடைய பங்கு சந்தை அனுபவங்களை மிக சுவையாக எழுதியிருந்தார்.

நான் இந்த வலைப்பூவில் எங்காவது கேட்டது படித்தது என எதாவது எழுதியிருந்தாலும் என் அனுபவங்களை இதுவரை எழுதியதில்லை. புத்தகத்தில் படித்ததெல்லாம், நான் சொல்லவில்லை என்றால் கூட வேறு வழியில் கிடைக்க கூடும்.

ஆனால் ஒரே விசயத்தில் ஒவ்வொருவரின் அனுபவமும் வேறுபடும். இந்த பதிவுகள் யாருக்கும் பயன்படுகிறதோ இல்லையோ செய்த தவறுகளை திரும்ப செய்யாமல் இருக்க குறைந்த பட்சம் எனக்கே உதவியாக இருக்கும்.

நான் சின்ன பையனாக இருக்கும்போதே என் அம்மா மாதம் 15 ரூபாய் குடுத்து போஸ்ட் ஆபீஸில் RD கட்டி வர செய்தார்கள். அப்பல்லாம் வீட்டில உண்டியல் இருக்கும் அப்பா ஆபீஸ்ல இருந்து வந்ததும் பாக்கெட்ல சில்லரை எதாவது இருந்தா அப்பப்ப அதுல போட்டு வைப்பார்.

இதையெல்லாம் பாத்து வளந்த எனக்கு பணத்தை சேமிக்க வேண்டும் என்ற என்னம் சின்ன வயதில் இருந்தே இருந்தது. இப்பல்லாம் எத்தனை வீட்டுல உண்டியல் இருக்குன்னு தெரியலை. பணம் எங்கிருந்து வருதுன்னா ATM மிசின்ல இருந்து வருதுன்னு சொல்றவங்கதான் ஜாஸ்தி.

நான் படிச்சி முடிக்கும் வரை பணத்தின் கஷ்டம் தெரியாமல்தான் இருந்தேன். அப்பா எதாவது உருட்டி புரட்டி குடுத்துடுவார். ஆனால் வீண் விரயம் செய்ததில்லை.

பணத்தின் அருமையை அழகாக உணர்த்தியவன் என் நண்பன் பேர் சங்கர். நாங்க ரெண்டுபேரும் 1ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்புவரை பள்ளி தோழர்கள். அவங்க அப்பாவும் என் அப்பாவும் ப்ரெண்ட்ஸ் ஒன்றாக ரயில்வேயில் பணியாற்றியவர்கள்.

காலேஜ் முடிச்சி சென்னையில் ஒரு கம்பெனியில் சாதாரண வேலைக்கு 1000 ரூ சம்பளத்திற்கு சேர்ந்து கம்பெனி விட்டு கம்பெனி தாவி ரூ 5000 சம்பளம் அளவிற்கு வளர்வதற்குள் 2 - 3 வருடம் ஓடிவிட்டது.

சம்பாதிக்கிறதுல எதாவது மீதி இருந்தாதானே சேமிக்கிறது பத்தியெல்லாம் யோசிக்கனும். சம்பளம் 5000 ஆன பிறகு கொஞ்சம் பணம் Savings Accountல் இருக்க தொடங்கியது.

அப்போதுதான் என் நண்பன் சங்கர் என் ஊரில் ஒரு DTP சென்டர் ஆரம்பித்தான். அப்போது கொஞ்சம் பணம் அவனுக்கு ஹார்ட் டிஸ்க் வாங்க மற்றும் லேசர் பிரிண்டர் மாற்றவும் தேவைப்பட்டது அப்போது என்னிடம் இருந்த 15,000 ரூபாய்களை கொடுத்து உதவினேன். (இது நடந்தது 1998 - 99 இருக்கலாம்)

(தொடரும்)

Posted in Labels: |