இந்திய பங்கு சந்தை அடிப்படை தகவல்கள் 1

இந்திய பங்கு சந்தை
அடிப்படை தகவல்கள் (BASICS)



பங்கு சந்தை
விற்பவர்களும் வாங்குபவர்களும் வரும் இடம். இது ஒரு இடமாக (physical trading floor) இருக்கலாம் அல்லது ஊடகமாக (Virtual Environment) இருக்கலாம்.

எலெக்ட்ரானிக் ட்ரேடிங் (Electronic trading )
வி-சாட்(VSAT) மூலமாக பங்கு சந்தையும் புரோக்கர்களின் அலுவலகத்தையும் இனைத்து டெர்மினல் மூலமாக வர்த்தகம் செய்யும் முறை.

இந்திய பங்கு சந்தைகள் (Exchanges)
மும்பை பங்கு சந்தை BSE (Bombay Stock Exchange)
தேசிய பங்கு சந்தை NSE (National Stock Exchange)
இதை தவிர ஒன்றினைக்கப்பட்ட 20 ரீஜியனல் சந்தைகளும் இருக்கிறது.
பி.எஸ்.சியும் என்.எஸ்.சியும் வி.சாட் மூலமாக இந்தியா முழுவதும் பங்கு வர்த்தகத்தை வழங்குகிறது.

பங்கு சந்தை குறியீடு (Index)
சென்செக்ஸ் (பி.எஸ்.சியின் முப்பது பெரிய கம்பெனிகள் அடங்கிய குறியீடு)
நிப்டி (என்.எஸ்.சியின் ஐம்பது பெரிய கம்பெனிகள் அடங்கிய குறியீடு)

புரோக்கர் (Broker)
செபி (Securities and Exchange Board of India) விதிமுறைகளின்படி பி.எஸ்.சியிலோ, என்.எஸ்.சியிலோ அல்லது இரண்டிலுமோ பதிவு செய்து கொண்டவர்கள். இவ்வாறு பதிவு செய்தவர்கள் மட்டுமே சந்தையை இயக்க முடியும். உதாரணம் ஐசிஐசிஐ செக்யூரிடீஸ், மோத்திலால் ஓஸ்வால், ஷேர்கான், ஜியோஜிட்

சந்தையில் பங்கேற்கும் முறை
எதாவது ஒரு புரோக்கரை தேர்ந்தெடுத்து அதற்கான அக்ரிமெண்ட் போட்டுக்கொண்டு தொலை பேசி மூலமாகவோ அல்லது இனைய தள மூலமாகவோ பங்கேற்கலாம்.

காண்ட்ராக்ட் நோட் (Contract Note)
நீங்கள் வாங்கவோ விற்கவோ செய்ததை வர்த்தகம் நடைபெற்ற நாள், தேதி, நேரம், விலை, எண்ணிகை போன்ற விவரங்களை குறித்த அதற்குறிய படிவம். இது வர்த்தகம் நடைபெற்ற 24 மணி நேரத்துக்குள் கொடுக்கப்பட வேண்டும் என செபி (Securities and Exchange Board of India) சொல்கிறது.

புக் குளோசர் / ரெக்கார்ட் டேட் (Book Closure / Record Date)
புக் குளோசர் மற்றும் ரெக்கார்ட் டேட் நிறுவனம் குறிப்பிட்ட ஒரு தேதியில் அதன் ஷேர் யார் யாரிடம் உள்ளது என்பதை தீர்மானிக்கும் காரணி.

இந்த புக் குளோசர் டேட் அவ்வப்போது நிறுவனத்தால் அறிவிக்கப்படும். டிவிடன்ட், போனஸ் போன்றவை ஒரு ‘குறிப்பிட்ட நாளில்’ (அந்த குறிப்பிட்ட நாள் ரெக்கார்ட் டேட் எனப்படும்) அந்த நிறுவன ஷேர் வைத்திருப்பவர்களுக்கு வழங்க இது பயன்படுகிறது.

நான் டெலிவரி பீரியட் (Non Delivery Period)
எப்போது நிறுவனம் புக் குளோசர் தேதி அறிவித்திருக்கிறார்களோ அப்போது அந்த ஷேர்களை வர்த்தகம் மட்டுமே நடத்த முடியும் நம் கணக்கில் உடனடியாக வரவு வைக்க முடியாது. புக் குளோசர் தேதி முடிந்த பிந்தான் நம் கணக்கிற்கு வரும்.

எக்ஸ் டேட் (Ex-Date)
நோ டெலிவரி பீரியட்டின் முதல் நாள் எக்ஸ் டேட். இந்த எக்ஸ் டேட்டிற்கு பிறகு வாங்கப்படும் ஷேர்களுக்கு டிவிடன்ட்/போனஸ் போன்றவை கிடைக்காது.

போனஸ் (Bonus)
நிறுவன நிர்வாகத்தால் ஷேர் வைத்திருப்பவர்களுக்கு அதீத லாபத்தை பகிர்ந்தளிக்கும் ஒரு முறை.

பங்கு பிரிப்பு (Split)
பங்கின் முக மதிப்பை குறைத்து பங்குகளை அதிகரிக்கும் ஒரு முறை. உதாரணத்திற்கு 10ரூ முக மதிப்புடைய 100 பங்குகள் உங்களிடம் இருந்தால் முக மதிப்பு 2ரூ ஆக பிரிக்கும் போது உங்கள் கணக்கில் 500 பங்குகள் இருக்கும்.


என்னுடைய இன்னொரு வலைப்பூ பார்க்க இங்க க்ளிக் பண்ணுங்க.

Posted in Labels: |