பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை
Posted On Tuesday, September 18, 2007 at at 9:45 PM by மங்களூர் சிவா
பொருள் ஈட்டுவது எப்படி ஒரு கலையோ அதே போல ஈட்டிய பொருளை காப்பதும் அதை பெருக்குவதும் ஒரு கலையே. இதைபற்றி இதற்கு முன்னரே அறிந்திருந்தாலும், பலர் எழுதியிருந்தாலும் சில விசயங்கள் எத்தனை தடவை பேசினாலும் சலிக்காது அதில் இதுவும் ஒன்று என்பது என் நம்பிக்கை. இன்றைய தமிழ் சினிமா ‘பொருள்’ என்பதற்கு வேறு அர்த்தம் கொடுத்திருக்கிறது அதில்ல இது.
செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமையே நமது செல்வம். எதை செய்தாலும் அதை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதே அதன் பொருள். ஆழம் தெரியாம காலை விடக்கூடாதுன்னு பெரியவர்கள் சொல்வார்கள். அதாவது ஒரு செயலை செய்யும் முன் அதை பற்றி நன்கு அறிந்து பின் செயல்பட வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை அது.
தண்ணீரில் இறங்காமலே நீச்சல் கத்துக்க முடியுமா? முடியாது. இறங்கனும் ஆனா பத்திரமாக.
சரி சார் எதாவது ஹாட் டிப்ஸ் சொல்லுங்க, இன்ட்ரா டே டிப்ஸ் சொல்லுங்க பணத்தை அள்ளி குமிச்சுருவோம்னு கேக்குறவங்களுக்கு சாரி சார் மொதல்ல இது தான் பெல், இது தான் பிரேக், இது தான் பெடல்னு ஒரு இன்ட்ரோ குடுத்துடுவோம் அப்புறம் ரேசுக்கு போவோம்.
இது பங்கு சந்தை பற்றிய மிக அடிப்படை தகவல்கள் மற்றும் அதை எப்படி அணுகினால் நல்லது நஷ்டம் வராமல் முதலீடை பாதுகாப்பது மற்றும் இதை பற்றிய இணைய தளங்களின் லிங்க்கள் போன்ற பல விசயங்களை பற்றி இங்கு போரடிக்காம சில பல உதாரணங்களுடன் பார்ப்போம்.
பல இடங்களில் நான் ஆங்கில சொற்களையே தமிழில் எழுதி இருப்பேன் ஏன் என்றால் அவைதான் சாதாரணமாக வழக்கத்தில் உபயோகிக்கப் படும் வார்த்தைகள். அவற்றிர்கு தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட வார்த்தைகள் இருந்தாலும் பணிரெண்டாம் வகுப்பு வரை தமிழில் படித்த மாணவன் கல்லூரி போனதும் எல்லாம் ஆங்கிலம் எனும் போது எப்படி குழப்பமாக இருக்குமோ அப்படி குழப்பமே மிஞ்சும்.
என்னுடைய இன்னொரு வலைப்பூ பார்க்க இங்க க்ளிக் பண்ணுங்க.