இந்திய பங்கு சந்தை அடிப்படை தகவல்கள் 2

பங்குகளை திரும்ப பெறுதல் (Buy Back)
பெயரிலேயே இருக்கிறது. நிறுவனத்தின் பங்குகளை வைத்திருப்பவர்களிடமிருந்து நிறுவனம் திரும்ப வாங்கிக்கொள்ளும் செயல்.

இது பலவிதமாக நடக்கலாம் பங்குகளை வைத்திருப்பவர்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட விகிதத்திலோ (proportionate basis), செகண்டரி மார்க்கெட்டிலோ அல்லது புக் பில்டிங் பிராசஸ் மூலமாகவோ நடக்கும்.

செட்டில்மெண்ட் சைக்கில் (Settlement Cycle)
பங்கு பரிவர்த்தனை கணக்குகளை செட்டில் செய்ய எடுத்துக்கொள்ளும் கால அளவு
தேசிய சந்தையில் புதன் முதல் செவ்வாய் வரை
மும்பை சந்தையில் திங்கள் தொடங்கி வெள்ளி

ரோலிங் செட்டில்மெண்ட் (Rolling Settlement)
இது ஒவ்வொரு நாளும் நடைபெற்ற வர்த்தகத்தை குறிப்பிட்ட வர்த்தக தின இடைவெளிக்குள் செட்டில் செய்வதை உறுதி செய்கிறது. தற்போதைக்கு இது ஐந்து வர்த்தக தினங்கள்.

ஷார்ட் செல்லிங் (Short Selling)
இது சட்டப்படி அனுமதிக்கப்பட்ட வர்த்தக முறை. அதாவது உங்கள் கணக்கில் இல்லாத ஷேர்களை விற்கலாம் ஆனால் அன்றைய தின வர்த்தகம் முடியும் முன் திரும்ப வாங்கி கணக்கை நேர் செய்ய வேண்டும். அதேபோல வாங்கியும் விற்கலாம் பங்கின் விலை ஏற்ற இறக்கத்தை பொறுத்து லாபமோ / நட்டமோ ஏற்படும் சுருங்க சொன்னால் வெறும் கையில் முழம் போடும் முறை ரிஸ்க் எடுக்க வேண்டும்.

ஆக்சன் (Auction)
இது பங்குகளை வாங்கிவிட்டு பணம் செலுத்தாமல் இருந்தாலோ இல்லாத பங்குகளை விற்றுவிட்டு டெலிவரி கொடுக்காமல் இருந்தாலோ பங்கு சந்தை உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை. இதற்காக தனி மார்க்கெட் உள்ளது. செபி விதிமுறைகளின் படி இது நடக்கும்.

டீமாட் (DEMAT)
டீமாட் டீமெட்டீரியலைசேசன்(Dematerialisation)என்பதின் சுருக்கம்.

அதாவது ‘டீமாட்’தான் நீங்கள் வாங்குகின்ற அல்லது விற்கின்ற பங்குகளை வைத்திருக்கும் கணக்கு. சில வருடங்களுக்கு முன்பாக பங்குகள் டாக்குமெண்டுகளாக (Physical paper documents) இருந்தது அப்போது தொலைந்து போவது, போஸ்டில் அனுப்பும் போது தாமதமாகுவது, விற்கும்போது கையெழுத்து மேட்ச்சிங் ஆகாமல் கம்பெனியால் நிராகரிக்கப்படுவது போன்ற பல பிரச்சனைகள் இருந்து வந்தது.

இப்போது கணிணி மயமாக்கிவிட்டார்கள் எனவே அது போன்ற பிரச்சனைகள் இல்லை அதுதான் டீமாட்.

டெபாசிடரி (Depositary)
டெபாசிடரியை பங்குகளின் கணக்கை கையாளுகின்ற வங்கி என சொல்லலாம். தற்போது இந்தியாவில் 1. NSDL (National Securities Depositary Limited), 2. CDS (Central Depositary Services) என இரண்டு டெபாசிடரிகள் உள்ளது.

டெபாசிடரி பார்டிசிபன்ட் (Depository Participant)
இது பாங்க் அல்லது புரோக்கர் NSDL ன் பார்ட்னர்கள் டீமாட் அக்கவுண்ட்டை வழங்குபவர்கள். ஒவ்வொரு டெபாசிடரி பார்டிசிபன்ட்டும் டெபாசிடரியுடன் விசாட் (VSATS) மூலம் இணைக்கப்பட்டிருக்கும்.

ஆர்பிட்டரேஜ் (Arbitrage)
ஒரு நிறுவனத்தின் பங்கு இரு வேறு சந்தைகளில் பட்டியலிடப்பட்டு வர்த்தகம் ஆகும் போது இரு சந்தை விலைகளுக்கும் உள்ள வித்தியாசம். உதாரணத்திற்கு இன்போசிஸ், ரிலையன்ஸ் பங்குகள் NSE, BSE ல் வர்த்தகம் ஆகின்றன.

ஐ.பி.ஓ (IPO Initial Public offer)
ஒரு நிறுவனம் முதல் முறையாக பங்குகளை வெளியிடுவதற்கு ஐ.பி.ஓ என்று பெயர். ஐ.பி.ஓவில் கிடைக்கும் பங்குகள் நிறுவனத்திடமிருந்து நேரடியாக பெறப்படுபவை.

புக் பில்டிங் (Book Building)
ஐ.பி.ஓ வில் வெளியிடும் பங்கின் விலையை bidding மூலம் தீர்மானிக்கும் தீர்மானிக்கும் முறை. இந்த முறையில் மட்டும் இல்லாமல் குறிப்பிட்ட விலையிலும் (Fixed price issue) பங்கு வெளியிடுவதும் உண்டு.

என்ன நண்பர்களே படித்து குழம்ப வேண்டாம் இவை எல்லாம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய மிக அடிப்படை தகவல்கள்.

வெற்றிகரமாக சந்தையில் பணம் சம்பாதிக்க இன்னும் பல உத்திகளும் சில ஒழுக்க முறைகளும் வேண்டும். அவை வரும் பதிவுகளில்

என்னுடைய இன்னொரு வலைப்பூ பார்க்க இங்க க்ளிக் பண்ணுங்க.

Posted in Labels: |