என் அனுபவங்கள் -2
Posted On Monday, December 3, 2007 at at 5:40 AM by மங்களூர் சிவாகுறிப்பு : சிலருடைய மோசமான அனுபவங்கள் எல்லாம் உதாரணங்கள் அல்ல.
அனுபவம் 1
அந்த காலத்தில் அதாவது 1998 - 1999 களில் DTP சென்டருக்கு நல்ல மரியாதை இருந்தது, பிசினஸ் இருந்தது. மாதம் பத்திலிருந்து இருபதாயிரம் அதற்கு மேலும் வருவாய் இருந்தது அந்த காலத்தில் இது மிகப்பெரிய தொகை. சாப்ட்வேர் கம்பெனிகள் எல்லாம் இந்த அளவு சென்னையைகூட எட்டி பார்க்காத நேரம். டிகிரி படித்தவர்களே இரண்டாயிரம் மூவாயிரம் சம்பளத்திற்கு வர தயாராக இருந்தார்கள்.
சொந்த ஊரில் அவன் பிசினஸ் செய்து வந்ததால் வீட்டு வாடகை இல்லை சாப்பாட்டு செலவு இல்லை என பல advantage. நான் சென்னையில் வாடகை, சாப்பாட்டு செலவு போக்குவரத்து செலவு என சம்பளத்தில் முக்கால்வாசி பணத்தை செலவு செய்துகொண்டிருந்தேன்.
அவனுடைய அபார திறமையான நிர்வாகத்தால் ஒரே வருடத்தில் இரண்டு மூன்று லட்ச ரூபாய் கடன்காரனாகி கடையை அம்போவென விட்டுவிட்டு ஊரை விட்டு எங்கோ போய்விட்டான்.
எவ்வளவுதான் நெருங்கிய நண்பனாக இருந்தாலும் கடன் கொடுக்ககூடாது என பாடம் கற்றுக்கொண்டேன். அதற்கு நான் கொடுத்த விலை ரூ 15,000 ஏறக்குறைய ஒரு வருட சேமிப்பு அது. நல்ல வேளையாக அவனுக்கு ஜாமீன் எதுவும் நான் போடவில்லை.
அதன்பிறகு சேமிப்பு என நான் செய்தது போஸ்ட் ஆபீஸில் மாதம் 1000 ரூபாய்க்கான RD ஐந்து வருடத்திற்கு அப்போது அதற்கு 9.5 சதவீதம் வட்டி கிடைத்தது. அப்போதெல்லாம் இந்த பங்கு சந்தை, ம்யூச்சுவல் பண்ட் எல்லாம் எனக்கு என்று இல்லை என் ஊரில் 99% ஆட்களுக்கு எதுவும் தெரியாது. அந்த மீதி 1% ஆட்களும் என் ஊரில் இல்லை :-))
இப்படி போய்கொண்டிருக்கும்போது வேலை மாற்றலாகி 2002ல் மங்களூருக்கு வந்தாச்சு. இப்பதான் இன்கம் டாக்ஸ் கட்டுகிற அளவுக்கு சம்பளம். டாக்ஸ் தவிர்க்க சீனியர் எல்லாரும் LIC தான் போடுவார்கள் இல்லை என்றால் ICICI அல்லது IDBI இன்ப்ரா ஸ்டரக்சர் பாண்ட் எடுப்பார்கள் அதற்கு 5 முதால் 6 % வருட வட்டி + டாக்ஸ் பெனிபிட் கிடைக்கும். நானும் முதல் இரண்டு வருடங்களுக்கு இந்த பாண்ட் வாங்கி ஆபீசில் விவரங்களை கொடுத்து TDSஐ குறைத்து வந்தேன்.
(தொடரும்)