என் அனுபவங்கள் -3

குறிப்பு : சிலருடைய மோசமான அனுபவங்கள் எல்லாம் உதாரணங்கள் அல்ல.

அனுபவம் 1

அனுபவம் 2

மூன்றாவது வருடம் அதாவது 2004ல் உடன் வேலை செய்யும் நண்பர் ஒருவர் ம்யூச்சுவல் பண்ட் ELSS (Equity Linked Saving Scheme)ஐ ஆபீஸில் சப்மிட் செய்ததை பார்த்தேன். அது என்ன ஏது என்று அவரை கேட்க அதெல்லாம் எனக்கு ஒன்னும் தெரியாது என் சித்தப்பா இப்படி செய்ய சொன்னார் செஞ்சேன்னு முடிச்சிகிட்டார்.

அதன் பிறகு அதை பற்றி கூகுள் ஆண்டவரிடம் சொல்லி தேடு தேடு என தேடி பல விசயங்கள் படித்தேன் ஆனாலும் ஒரு பயம் கடைசி லைன்ல இருக்குமே Returns are subject to Market Risk , Past performance is not guarantee to the future performance அதையெல்லாம் பாத்துட்டு. ஆனால் மார்க்கெட்டில் என்ன நடக்கிறது என்பதை தினமும் கவனித்து படித்து வந்தேன்.

கொஞ்சம் பயம் தெளிந்து முதல்முதலில் நான் செய்த முதலீடு Fidelity Equity Fund (G)ல் 6,500ரூபாய்கள் NFOல். அப்போது மார்க்கெட் 8000 பாயிண்ட்டுகள் என நினைக்கிறேன் முதலீடு செய்த பணம் 8500 ஆன உடன் வெளியே வந்துவிட்டேன்.

பிறகு 'டாக்ஸ்' க்காக PRU ICICI TAX PLAN ல் ஒரு SIP ஆரம்பித்தேன். எதோ என் நல்ல புத்தி இன்றும் அதை தொடர்ந்து வருகிறேன். அதை ஆரம்பிக்கும்போது அது 5 ஸ்டார் ரேட்டிங்கில் இருந்தது இப்போது இல்லை வெறும் 3 ஸ்டார்தான் ஆனாலும் அது MID CAP FOCUSED FUND நீண்ட காலம் அதில் தொடர்ந்து முதலீடு செய்து வரும் போது நல்ல ரிடர்ன் இருக்கும் என உள்ளுக்குள் ஒரு பட்சி சொல்கிறது.

சந்தை சரிந்தது அப்பாடா நல்ல சமயத்தில் தான் Fidelity Equity Fundல் இருந்து வெளியேறியிருக்கிறேன் என ஒரு இருமாப்பும் வந்தது. சந்தை சரிவை பயன் படுத்தி Pru ICICI Emerging STAR 20,000 ரூபாய்க்கு வாங்கினேன் (இதுவும் மிட்கேப் ஃபோகஸ்ட் ஃபண்ட்) இரண்டு மாதத்திற்கும் குறைவான நேரத்தில் 22,000 ரூபாயாக வெளியேறினேன் சொல்லபோனால் என் முதல் ட்ரேட் இதுதான்.

இதன்பிறகு பலதரப்பட்ட பரீட்சாத்த முயற்சிகள் ஆனால் எல்லாம் ம்யூச்சுவல் பண்ட்டிலேயே நடத்தி வந்தேன். Moneycontrol.com ல் எதாவது புதுப்புது கட்டுரைகள் வந்து கொண்டே இருக்கும். அப்படி ஒரு நாள் வரவில்லை என்றால் கூட படித்த கட்டுரையை திரும்ப படிப்பேன் இல்லை என்றால் ராத்திரி தூக்கம் வராது :-)

Posted in Labels: |