என் அனுபவங்கள் -4

குறிப்பு : சிலருடைய மோசமான அனுபவங்கள் எல்லாம் உதாரணங்கள் அல்ல.

அனுபவம் 1

அனுபவம் 2

அனுபவம் 3


ஒரு சுபமுஹூர்த்த சுபதினத்தில் என் ஆபீஸ்க்கு வந்த மார்க்கெட்டிங் ஆளிடம் மாட்டி UTI Securities ல் டீமேட் ஆரம்பித்தேன். அப்போதெல்லாம் என்னிடம் கம்ப்யூட்டர் இல்லை, போன் செய்து பங்கை வாங்க சொல்வது / விற்க சொல்வது அல்லது அவர்கள் அலுவலகத்திற்கு சென்று ட்ரேட் செய்வது (ஆஃப் லைன் ட்ரேடிங்). அதற்கு முன்னரே வாரன் பப்பட் எல்லாம் இணையம் மூலமாக ஓரளவு அறிமுகமாகியிருந்தார்கள்.

முதன்முதலாக ட்ரேட் செய்யபோகிறேன் எந்த பங்கை வாங்குவது என்பதில் ரொம்ப ரொம்ப குழப்பமாக இருந்தது. பெரும்பாலோருக்கு முதல் ட்ரேட் செய்யும் போது இந்த குழப்பம் இருக்கும் என நம்புகிறேன். அதனால் UTI Securities அலுவலகத்திற்கே போய்விட்டேன் எனக்கு முன்னால் ஒருவர் "கர்னாடகா பாங்க்" பங்கு வாங்க சொன்னார். நானும் போய் இனிப்பு கடையில் எனக்கும் ஒரு கிலோ அதே குடுத்திடுங்க ரேஞ்சுக்கு அதையே 100 வாங்கினேன். அப்போது அந்த பங்கின் விலை மிக சரியாக 107 ரூபாய்.

என் நல்ல நேரமோ என்னமோ தெரியலை 120ரூபாய்க்கு வெளியே வந்துவிட்டேன். அடுத்ததாக நான் வாங்கிய பங்கு "ப்ரஜ் இன்டஸ்ட்ரீஸ்" அதன் விலை 110 ரூ வெளியேறிய விலை 115 அதிலும் லாபம். ஸ்டாக் மார்க்கெட்டில் கோடி ரூபாய் சம்பாதித்தது போல இருந்தது.

நடந்தேன் என சொல்வதை விட மிதந்தேன் என்றுதான் சொல்லவேண்டும். வாரன் பப்பட் நீண்ட கால முதலீடு எல்லாம் மறந்தே போய்விட்டது. இப்போது நினைத்து பார்த்தால் எத்தகைய முட்டாள்தனத்தை செய்திருக்கிறேன் என தெளிவாக தெரிகிறது.

குருட்டான் போக்கில் செய்த இரண்டு 'ட்ரேட்' களும் வெற்றி. சரி எப்பதான் நான் சந்தையிடம் பாடம் கற்றுக்கொள்வது.

எனக்கு பாடம் புகுத்திய பங்கு ஐடிபிஐ. 2006 ஜனவரி என நினைக்கிறேன் அதை பரிந்துரைத்தது UTI Securities நான் வாங்கும்போது அதன் விலை 105 கொடுக்கப்பட்ட டார்கட் 115 ஸ்டாப்லாஸ் 100.

இந்த காலகட்டத்தில் நிறைய படித்தும் பலருடன் பேசியும் தெரிந்து கொண்டதில் ஸ்டாப்லாஸ் ஒவ்வொருவரின் ரிஸ்க் கெபாசிடியை பொறுத்து மாறும் நிறைய ரிஸ்க் எடுத்தால் நிறைய லாபம் கிடைக்கும்னெல்லாம் புரிஞ்சிகிட்டு அவங்க குடுத்த ஸ்டாப்லாஸை காத்தில விட்டாச்சு. விலையோ இறங்கிகிட்டே வருது.

CNBC TV18 ஒரே சானல் தான் பாக்கிறது. நான் பேச்சிலர் என்பதால் சேனல் மாத்தனும் கோலங்கள் பாக்கனும்னு தங்கமணி தொல்லை எல்லாம் இல்லை. சில நாட்கள் நைட் ஷிப்ட் முடிந்து இரவு 2.30க்கு வீட்டுக்கு போய் டிவியை ஆன் செய்து NASDAQ மார்க்கெட்டெல்லாம் பார்ப்பேன். அதாவது முத்திபோயிடிச்சுன்னு சொல்லுவாங்களே அது மாதிரிதான் இருந்தேன்.

IDBI விலை 100, 90, 80 , 70 ன்னு குறைஞ்சுகிட்டே வருது நானும் ஆவரேஜ் பன்னறேன்னு இருக்கிற காசுக்கெல்லாம் வாங்கி குமிச்சிகிட்டே இருக்கேன். இருக்கிற மத்த ஷேர் எல்லாம் கூட வித்து இதை வாங்கினேன் 70க்கு கீழயும் போச்சு ஆனா நான் ஆவரேஜ் பன்றதை நிறுத்திட்டேன் போர்ட்போலியோல இருக்கிறது இது ஒரு ஷேர் மட்டும்தான் ஏறக்குறைய 650 ஷேர் கைல இருந்து போட்ட முதல் 50,000 மார்க்கெட் விலையோ 30,000 சரி இது நமக்கு சரிபட்டு வராதுன்னே முடிவு கட்டி கொஞ்ச நாள் அந்த பக்கமே போகாம சும்மா சுத்திகிட்டிருந்தேன் ஒருவழியா 48ரூ வரைக்கும் போய் தரைய தட்டி மெல்ல மேல்ல 80 ரூபாய்க்கு வந்த உடனே மொத வேலையா எல்லா பங்கையும் வித்துட்டேன். நோ லாஸ் நோ ப்ராபிட் இதற்கு எடுத்துகொண்ட காலம் 10 மாதங்கள்.

(தொடரும்)

Posted in Labels: |