புதியவர்களுக்காக
Posted On Monday, October 1, 2007 at at 7:24 AM by மங்களூர் சிவாஎல்லாரும் ஷேர் மார்க்கட்ல பணம் எக்கச்சக்கமா சம்பாதிக்கறாங்க நாமும் சம்பாதிப்போம் அப்படின்னு குருட்டான்போக்கில இறங்கினால் நஷ்டம்தான் மிஞ்சும். ஒன்றை உடனடியாக பத்தாக்குவதற்கு ஷேர்மார்க்கட் ஒன்றும் சூதாட்டகளம் அல்ல.
பங்கின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கத்திற்கு முக்கிய காரணம் Law of Demand and Supply அதாவது வாங்குபவர்கள் அதிகம் இருந்து விற்பவர்கள் குறைவாக இருந்தால் பங்கின் விலை ஏறும் அதே போல வாங்குபவர்கள் குறைவாக இருந்து விற்பவர்கள் அதிகம் இருந்தால் விலை சரியும்.
நிறுவனத்தின் நிர்வாகம் நன்றாக இருந்து லாபம் ஈட்டுவது, புதிய கம்பெனிகளை வாங்குவது (acquisitions) போன்ற சமயங்களில் நிறைய பேர் அந்த நிறுவன பங்கை வாங்க முயலும் போது (Demand) பங்கின் விலை ஏறும்.
நிறுவனத்தின் நிர்வாகம் சரியாக இல்லாமல் இருந்து அல்லது வேறு காரணங்களால் ஈட்டும் லாபம் குறைவது போன்ற சமயங்களில் பங்கை விற்க நிறைய பேர் முயலும் போது (Supply) விலை குறையும்.
பங்கின் விலை ஏற்ற இறக்கத்திற்கு இது மட்டுமே காரணம் அல்ல. வரும் பதிவுகளில் பார்ப்போம்.
என்னுடைய இன்னொரு வலைப்பூ பார்க்க இங்க க்ளிக் பண்ணுங்க.