MARKET CRASH HOW TO HANDLE
Posted On Wednesday, October 17, 2007 at at 7:06 AM by மங்களூர் சிவாவாரத்தில 2 நாட்கள் நைட் ஷிப்ட் அதாவது ராத்திரி 8.00மணிக்கு போனா அதிகாலை2.00 - 2.30க்கு வீட்டுக்கு வந்திடலாம். சாதாரனமாக நைட் ஷிப்ட் இல்லாத நாட்களில் காலை 7 மணிக்கு வாக்கிங் போவதை வழக்கமாக கொண்டுள்ள உள்ள எனக்கு நேற்று நைட் ஷிப்ட் இல்லாத போதும் இன்று அலாரம் அடிக்கும் போது எழ முடியவில்லை சரி ஈவ்னிங் வாக் போலாம் என நினைத்து தூங்கி எழும்போது காலை 9.00 மணி.( இது எதாவது instinctஆ என தெரியவில்லை)
டிபன் சாப்பிட்டு மெதுவாக ICICIDIRECT ஆன்லைன் ட்ரேடிங் போர்டல் ஓப்பன் செய்தால் போர்ட்போலியோ மதிப்பு தாறுமாறாக இருக்கு. ட்ரேடிங் குவான்டிடி அப்டேட் ஆகவில்லை. சரி இது எதோ ICICI போர்டல் ப்ராப்ளம் என நினைத்து மற்ற வணிகதளங்களை செக் செய்யும் போது தெரிந்தது சென்செக்ஸ் 1700 புள்ளிகள்ள் சரிவு 10% down side circuit filter triggered in NSE அதனால் பங்கு வர்த்தகம் 1 மணி நேரம் தடை செய்யப்பட்டுள்ளது.
11மணிக்கு திரும்ப வர்த்தகம் துவங்கியது ஆச்சரியமூட்டும் விதமாக 1400 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ் 18715.82 (-336) புள்ளிகளில் முடிந்தது.
இதற்குமுன் இது போல 2006 மே மாதம் மார்க்கெட் க்ராஷ் ஏற்பட்டு பங்கு வர்த்தகம் 1 மணி நேரம் நிறுத்திவைக்கப்பட்டது.சாதாரனமாக நான் Day Trade செய்வதில்லை. சில சமயம் என் holdingல் இருக்கும் பங்குகளில் செய்வேன். இல்லாத பங்குகளில் Margin trade செய்வதில்லை. ஒரு காலத்தில் அதை மட்டுமே செய்துகொண்டிருந்தேன். அவ்வளவு ரிஸ்க் மற்றும் நேரத்தை விரயம் செய்தும் பெரிதாக ஒன்றும் சாதிக்க முடியவில்லை. Day Trade தவறில்லை அது இல்லை என்றால் கையில் இருக்கும் பங்குகளை பணமாக மாற்ற முடியாது.
சரி மார்க்கெட் க்ராஷ்க்கும் Margin Tradingக்கும் உள்ள சம்பந்தம் என்ன என்றால் இது அணுப்பிளவு மாதிரிதான் எல்லா ஸ்டாப் லாஸ்களும் ஒரே நேரத்தில் trigger ஆகி (எரிகிற தீயில் பெட்ரோல் ஊற்றுவதை போல) ஏற்கனவே இறங்கிக்கொண்டிருக்கும் சந்தையை குப்புற தள்ளும்.
இதில் நஷ்டப்படுவவர்கள் இந்த Day traders தான். Quality Stockகளில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு சிறிது நஷ்டம் ஏற்பட்டாலும் விரைவில் அந்த பங்கின்விலை மேலே வந்துவிடும்.
சரி இப்போது என்ன செய்யவேண்டும் முதலாவது
1. Dont Panic.
2. Be patience
3. Cash is the only defensive weapon so sit in cash.
4. If you feel quality stock available at reasonable / cheap price buy in small quantity.
5. Investment is not a one time act. It is continous process.
Winners are not quitters.
All the best.