புதியவர்களுக்காக - 2

ஒரு நிறுவனத்தின் பங்கை வாங்குவதற்கு முன் அந்த நிறுவனம் பற்றி அதன் செயல்பாடுகள், லாபம் ஈட்ட கூடிய வழிகள், அதன் கடந்த ஆண்டுகளின் லாப நட்ட கணக்கு, P/E , EPS போன்றவற்றை ஆரய்ந்து பின்னர் வாங்க வேண்டும். இவை எல்லாம் http://www.nseindia.com/, http://www.bseindia.com/ மற்றும் பல இணையதளங்களில் கிடைக்கும்.

விலை குறைவாக இருக்கிறது என ஊர் பேர் தெரியாத கம்பெனி குப்பை பங்குகளை வாங்காதீர்கள்.

அவசர தேவைகளுக்காக என இருக்கும் பணத்தை ஷேர்களில் முதலீடு செய்யாதீர்கள். குறைந்த பட்சம் ஒரு ஆண்டிலிருந்து மூன்றாண்டுகள் காத்திருக்க முடியும் எனும் பட்சத்தில் முதலீடு செய்வது நல்லது.

கண்ணை மூடிக்கொண்டு நண்பர்கள் சொன்னார்கள் (TIPS), வேறு யாரும் சொன்னார்கள் என்று எதையும் வாங்காதீர்கள்.

எவ்வளவுதான் நல்ல நிறுவனமாக இருந்தாலும் எல்லா பணத்தையும் ஒரே நிறுவன பங்குகளில் முதலீடு செய்யாதீர்கள். வேறு வேறு துறைகளில் உள்ள நல்ல நிறுவனங்களின் பங்குகளில் பிரித்து முதலீடு செய்வதால் ஒரு நிறுவன பங்கு நன்றாக செயல்படாமல் நட்டம் ஏற்பட்டாலும் வேறு நிறுவன பங்குகள் நட்டத்திலிருந்து காப்பாற்ற உதவும். உதாரணத்திற்கு சாப்ட்வேர் என்றால் டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ் டெலிகாம் என்றால் ரிலயன்ஸ் கம்யூனிகேசன், பார்தி ஏர்டெல், இஞ்சினியரிங் துறை என்றால் எல்&டி, பி.எச்.இ.எல்.

உங்களுக்கு பங்கு சந்தை பற்றி நல்ல அனுபவம் வரும் வரை தின வர்த்தகம் (Day Trading) செய்யாதீர்கள்.

வாங்கிய பங்கு குறைந்த காலத்திலேயே 10 - 15 சதவிகிதம் லாபம் அடைந்திருந்தால் பங்குகளில் ஒரு பகுதியை விற்று பணத்தை தயாராக வைத்திருப்பது நல்லது. விலை குறந்தால் திரும்பவும் வாங்கலாம். விலை குறையவில்லை என்றாலும் பாதகமில்லை.

தொடர்ந்து பங்கு சந்தையில் என்ன நடக்கிறது என்பதை பற்றி தொலைகாட்சி, பத்திரிகை, இணையம் மூலமாக படித்து கவனித்து வாருங்கள்.

வாங்க பணம் பண்ணலாம் , ஸ்டார்ட் மியூஜிக்.

என்னுடைய இன்னொரு வலைப்பூ பார்க்க இங்க க்ளிக் பண்ணுங்க.