புதியவர்களுக்காக-3

பங்கு வாங்கியாகி விட்டது. அதை எப்படி தொடர்ந்து கண்காணிப்பது எனவும் பார்த்தாகி விட்டது. இனி செய்ய வேண்டியது என்ன?ஜாக்கிரதையாய் இருப்பதுதான்.

யாரிடம் ஜக்கிரதையாய் இருக்க வேண்டும்? பங்கு சந்தையிடம்.

வாரன் பப்பட் பங்கு சந்தையை பற்றி மிஸ்டர் மார்க்கட் என்ற பெயரில் சுவரசியமாக ஒரு கதை சொல்லுவார். அந்த கதையை விட்டுவிட்டு அதில் உள்ள கருத்தை மட்டும் சொல்லுகிறேன். "Market is always correct.market is perfect " என்ற ஒரு மாயை பங்கு சந்தையில் நிலவுகிறது. பப்பட் அது தவறு என்கிறார். பங்கு சந்தை பெர்பெக்டாக இருந்திருந்தால் நான் இன்னும் ஏழையாக தான் இருந்திருப்பேன் என்கிறார். பப்பட்டின் வார்த்தைகளில் Market is not awlays correct.It is at times correct.There is a difference between both these views. The difference is like that between day and night.

பங்கு சந்தையின் விலை உண்மை விலையை விட அதிகமாக இருக்கும்போது பேசாமல் இருக்க சொல்கிறார். பங்கு சந்தை விலை உண்மை விலையை விட குறைவாக இருக்கும்போது பங்குகளை வாங்க சொல்கிறார். பங்கு விலை குறைந்தால் தான் அவர் மகிழ்வார்.கடையில் பொருள் விலை குறைந்தால் வாடிக்கையாளருக்கு மகிழ்ச்சி தானே? அது போல் தான் இதுவும் என்கிறார் பப்பட்.

நிறைய கம்பனிகளின் பங்குகளை வாங்குவதையும் அவர் ஆதரிக்கவில்லை. 20 கம்பனிகளின் பங்குகளுக்கு மேல் அவர் வாங்கமாட்டார். நாம் இன்னும் குறைவாக தான் வாங்க வேண்டும்.ஒரே கம்பனியில் பணம் போடுவதும் தவறு. 10 நல்ல கம்பனிகளை கண்டறிந்த பிறகு மேலும் பணம் போடவேண்டுமென்றால் அந்த 10லேயே போடலாம் அல்லவா? 11வது கம்பனி எதற்கு என கேட்கிறார் பப்பட். "which is the right time to sell?"' என்ற குழப்பம் பங்கு சந்தை துறைகளில் உண்டு. பப்பட் இதற்கு தெளிவான பதில் வைத்திருக்கிறார். NEVER என்பது தான் அவரின் பதில்.

நம்மால் அப்படி செய்ய முடியாமல் போனாலும் குறைந்தது 10 - 20 வருடங்களுக்கு வாங்கிய பங்கை விற்கக் கூடாது. பப்பட் இதற்கு வீட்டை உதாரனம் சொல்கிறார்.10 லட்சம் தந்து வீடு வாங்குகிறோம்.வாங்கிய மறுநாள் சந்தை மதிப்பு 11 லட்சம் ஆகிறது. லட்ச ரூபாய் லாபம் கிடைக்கிறது என்பதற்காக வீட்டை விற்போமா? சந்தை விலையை பற்றி கவலைப்படவே மாட்டோம் அல்லவா? அதுபோல் தான் பங்குகளும் என்கிறார் பப்பட்