இன்சூரன்ஸ் -2

இன்சூரன்ஸ் முதல் பகுதி படிக்காதவங்க இங்க க்ளிக் பண்ணுங்க.

யூலிப் எனப்படும் யூனிட் லிங்க்ட் இன்சூரன்ஸ் ப்ளான் பற்றி தெரிந்துகொள்ள தென்றலின் பதிவுக்கு இங்க க்ளிக் பண்ணுங்க. யூலிப் பற்றிய இந்த பதிவுக்கு திரு. ஏவிஎஸ் அவர்களின் பின்னூட்டமும், நான் எழுதிய பின்னூட்டமும் மீள் பதிவு செய்யப்படுகிறது. (ஒரு பேக்கப் தானுங்க)



ஏவிஎஸ்
said...
ULIP திட்டத்தின் சாதக பாதகங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

நான் மூன்றாண்டுகளுக்கு முன் பஜாஜ் அலயன்சின் ULIP திட்டத்தில் சேர்ந்தேன். இந்த ஆண்டு என் மூன்றாண்டு முதலீடுகளும் எவ்வளவு பணம் ஈட்டியிருக்கிறது என்று பார்க்கும் போது ஆண்டுக்கு 8 சதவிகிதத்தை தாண்டவில்லை. இத்தனைக்கும் நான் எனது ULIP முதலீட்டில் 80% பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்திருந்தேன்.

இந்த மூன்றாண்டும் பங்குச் சந்தை அபாரமாக வளர்ந்தும் எனது ULIP முதலீடு பெருகாததற்கு காரணங்கள்

1. முதலாண்டில் எனது முதலீட்டில் 70 சதவிகிதம் முகவர் கமிஷனுக்கும் (30%), பஜாஜ் அலயன்ஸ் நிர்வாகச் செலவுகளுக்கும் போய் விட்டது

2. ஒவ்வொரு மாதமும் எனது ஆயுள் காப்பிற்கான தொகை முதலீட்டிலிருந்து கழிக்கப்பட்டு விடுகிறது. அதாவது உங்களுக்கு ULIP ஆயுள் காப்பீடு 1 லட்சம் என்றால், அதற்கான மாதக் கட்டணம் மாதம் ரூ 200 இருக்கலாம். அதை நீங்கள் செலுத்தும் தொகையிலிருந்து கழித்து விட்டு மீதிப் பணம்தான் முதலீடு செய்யப்படுகிறது.

3. ULIP முதலீட்டிற்குள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு திட்டத்திற்கும் 5% வருடாந்திர சேவைக் கட்டணம் வசூலிருக்கிறார்கள். இது தவிர, முதல் மூன்றாண்டுகளில் பஜாஜ் அலயன்ஸ் சேவைக் கட்டணமாக 3% வருடா வருடம் வசூலித்து விடுகிறது. பரஸ்பர நிதிகள் இந்த மாதிரி வசூலிப்பது 2% சதவிகிதத்தை தாண்டினாலே அது அதிகம் என்கிறார்கள். முதலீட்டில் ஆண்டொன்றுக்கு 5-8% இப்படி வீணாவது முறையன்று. அதிலும் முதலீடுகள் நஷ்டமடையும் ஆண்டுகளில், இந்த கட்டணங்கள் முதலுக்கே பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தும். நீங்கள் ஒரு ஆண்டு முதலீடே செய்யாவிட்டாலும் ஏற்கனவே உங்களது கணக்கில் இருக்கும் முதலில் இருந்து இந்தக் கட்டணங்களுக்கான பணத்தை எடுத்துக் கொள்வார்கள்.

4. ULIP திட்டத்தில் வரிச் சலுகை இருப்பது உண்மைதான். ஆனால், அந்த வரி சலுகை உங்களுக்கு வருமானம் 5 லட்சத்திற்கு கீழே இருந்தாலும், நீங்கள் ஆயுள் காப்பீட்டிற்காக செலுத்தும் தொகை 1 லட்சத்திற்கு கீழே இருந்தாலும் மட்டுமே

எனது பஜாஜ் அலயன்ஸ் ULIP அனுபவத்தை வைத்துப் பார்த்தால், ULIP-ஐ விட பரஸ்பர நிதித் திட்டங்களில் மாதாமாதம் முதலீடு செய்வதுதான் சாலச் சிறந்தது. கடந்த மூன்றாண்டுகளில் எனது பரஸ்பர நிதி முதலீடுகள், ஆண்டொன்றுக்கு 20 முதல் 70 சதவிகிதம் பணம் ஈட்டியிருக்கின்றன. அவற்றை நான் என் விருப்பப்படி எப்போது வேண்டுமானாலும் விற்கலாம்.

சந்தையின் போக்குகளையும், எனது நிதி நிலைமையையும் வைத்து கூடுதலாகவோ, குறைவாகவோ முதலீடு செய்யலாம். இந்த வசதிகள் ULIP-ல் கிடையாது.




மங்களூர் சிவா
said...

என்னை பொருத்தவரை ULIP என்பது ஓர் ஃப்ராட் திட்டம்.

மக்கள் இன்சூரன்ஸ் காப்பீடு என்றால் என்ன. ஏன் வேண்டும். நமக்கு எவ்வளவு தேவை மற்றும் இன்வஸ்ட்மெண்ட் இரண்டையும் தனி தனியாக பிரித்து பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும்

எல்.ஐ.சி யின் அன்மோல் ஜீவன் தவிர எந்த ஒரு திட்டமும் ப்யூர் இன்சூரன்ஸே கிடயாது.இதில் 5 லட்ச ரூபாய் காப்பீட்டுக்கு 30 வயது உடயவருக்கு வருடத்திற்கு ப்ரீமியம் சுமார் 1750 ரூபாய்தான்.

இதே அளவு காப்பீடுக்கு வேறு திட்டங்களில் மணி பேக் ஆகட்டும், யூலிப் ஆகட்டும் குறைந்த பட்சம் 20,000 முதல் 25,000 ரூபாய் கட்ட வேண்டும்

5 லட்சத்திற்கு ஒரு அன்மோல் ஜீவனும் ப்ரீமியம் ரூ 1750 மீதி 17,250 ஐ பங்கு சந்தையில் நேரடியாகவோ அல்லது ம்யூசுவல் ஃபண்ட் திட்டங்களிலோ போட்டுவந்தால் முதலீட்டின் மேல் வருடததிற்கு 20 முதல் 25 சதவிகிதம் வருமானம் எதிர் பார்க்க முடியும்.


Note : Concept of Insurance, Functioning of Insurance எல்லாம் படித்ததால், மற்றும் அத்துறையில் இருக்கும் சிலர் தொடர்பு இருந்ததாலும், இன்சுரன்ஸ் மற்றும் இன்வ்ஸ்மெண்ட் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்ற ஆதங்கத்தாலும் Fraud என்று சொல்லியிருப்பேன்

Fraud என்பது தகாத வார்த்தையாக இருந்திருக்கலாம் ஆனால் எனக்கு இன்னும் சரியான வார்த்தை கிடைக்கவில்லை.